ஒரே வாரத்தில் பருக்கள் நீங்க!!  இரவில் தூங்கும் முன் இந்த பேஸ் பேக் ட்ரை பண்ணுங்க!! 

Published : Mar 05, 2025, 05:33 PM IST

Summer Skincare Tips  : உங்கள் முகத்தில் பருக்கள் அதிகமாக இருந்தால் ஒரே வாரத்தில் நீங்க பெஸ்ட் 4 ஃபேஸ் பற்றி இங்கு காணலாம்.

PREV
16
ஒரே வாரத்தில் பருக்கள் நீங்க!!  இரவில் தூங்கும் முன் இந்த பேஸ் பேக் ட்ரை பண்ணுங்க!! 
ஒரே வாரத்தில் பருக்கள் நீங்க!!  இரவில் தூங்கும் முன் இந்த பேஸ் பேக் ட்ரை பண்ணுங்க!!

முகத்தில் பருக்கள் வருவது ஒரு பொதுவான பிரச்சனை. பல பெண்கள் முகப்பரு பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக கோடை காலம் வந்தாலே பல பெண்கள் முகப்பரு பிரச்சனையை சந்திக்கிறார்கள் முக்கியமாக காலேஜ் செல்லும் பெண்கள் இந்த முகப்பரு பிரச்சனையால் ரொம்பவே சங்கடமாக உணர்கிறார்கள். முகப்பருக்கள் வலியை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் சருமத்தையும் கெடுக்கும். பருக்கள் வந்தால் குணமாகினாலும் அவற்றால் ஏற்பட்ட தழும்புகள் மற்றும் கறைகள், கரும்புள்ளிகள் நீண்ட நாள் முகத்தில் இருக்கும். இதனால் முகத்தின் அழகுதான் பாதிக்கப்படுகின்றன. 

26
முகத்தில் உள்ள பருக்கள் மறைய

உங்களது முகத்தில் முகப்பருக்கள் ரொம்பவே அதிகமாக இருக்கிறதா? கண்ணாடியில் உங்களது முகத்தை பார்க்கும் போது அசிங்கமாக இருக்கிறது என்று சங்கடப்படுகிறீர்களா? இதற்காக நீங்கள் கடைகளில் விற்கப்படும் பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து ஃபேஸ் பேக்குகளாகப் போட்டால் முகப்பரு பிரச்சனையில் இருந்து சுலபமாக விடுபடலாம். அது என்னென்ன ஃபேஸ் பேக்குகள் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

36
மஞ்சள் மற்றும் தயிர்

மஞ்சளில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளும், தயிரில் இருக்கும் லாக்டிக்ட அமிலம் இறந்த செல்களை நீக்கவும் உதவுகின்றன. எனவே இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக் உங்களது முகத்தில் உள்ள பருககளை சுலபமாக நீக்கிவிடும். இதற்கு ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் மஞ்சள் மற்றும் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து, அதை முகத்தில் தடவி 15 நிமிடம் அப்படியே வைத்து விட்டு பிறகு சூடான நீரால் முகத்தை கழுவுங்கள்.

இதையும் படிங்க:  Beauty Tips : கோடையில் சருமம் குளு குளுனு இருக்க சூப்பரான ஃபேஸ் பேக்..! இப்பவே செய்ங்க..

46
ஓட்ஸ் மற்றும் தேன்

ஓட்ஸ் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்க உதவும் மற்றும் சரும துளைகளை அடைக்கும். அதுபோல தேன் தடிப்புகள் மற்றும் அழற்சி பிரச்சினையை நீக்கும். எனவே இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் மற்றும் 1 ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து அதை உங்களது முகத்தில் தடவி 15 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பிறகு சூடான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

இதையும் படிங்க: Summer Beauty Tips : வெயிலில் முகம் கருப்பாகாமல் பளிச்னு இருக்க 4 டிப்ஸ்!!

56
முட்டையின் வெள்ளை கரு மற்றும் எலுமிச்சை சாறு

முட்டையின் வெள்ளை கருவில் இருக்கும் புரோட்டீன் சருமத்தை இறுக்கமடையச் செய்யும். அதுபோல எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் பருக்கள் தழும்புகளை நீக்கும். இவற்றைக் கொண்டு பேஸ் பேக் தயாரிக்க ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளை கருவை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து அதை உங்களது முகத்தில் தடவி 10 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு சூடான நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

66
தேன் மற்றும் பட்டை

பட்டை மற்றும் தேனில் இருக்கும் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகள் முகத்தில் இருக்கும் பருக்களை நீக்கும் மற்றும் இனி பருக்கள் வராமல் தடுக்க உதவும். இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு பட்டத்துள் சேர்த்து நன்றாக கலந்து உங்களது முகத்தில் தடவி 10 நிமிடம் அப்படியே வைத்து விட்டு சூடான நீரை கொண்டு முகத்தை கழுவுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories