Hibiscus Flower for Glowing Skin : ஒரே வாரத்தில் உங்களது முகம் பளபளக்க செம்பருத்திப்பூவே முகத்திற்கு எப்படி போட வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
முகம் ஜொலிக்க செம்பருத்தி பூ.. ஒரே வாரத்தில் ரிசல்ட் தரும் பேஸ் பேக்!!
பொதுவாக ஒவ்வொரு பெண்களும் தங்களது முகம் பார்ப்பதற்கு ரொம்பவே அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் அடிக்கடி பியூட்டி பார்லர் செல்கிகிறார்கள். இன்னும் சிலரோ விலை உயர்ந்த கிரீம்கள் போன்றவற்றை வாங்கி முகத்தில் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவற்றால் பணம் வீணாக செலவானது தான் மிச்சம். எந்த பயனும் கிடைப்பதில்லை. இத்தகைய சூழ்நிலையில், பளபளப்பான முகத்தை பெற செம்பருத்தி பூவை முகத்திற்கு எப்படி பயன்படுத்துவது தெரிந்து கொள்ளலாம்.
26
செம்பருத்தி பூ
பொதுவாக தலை முடி மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வளருவதற்கு தான் செம்பருத்தி பூ மற்றும் அதன் இலையை பயன்படுத்துவார்கள். இப்போது செம்பருத்தி பூவை வைத்து முகத்தை அழகாக்கலாம். செம்பருத்தி பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஃபேஸ் பேக் உங்களது முகத்தை ஒரே வாரத்தில் பளபளப்பாக மாற்றும். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
36
செம்பருத்தி பூ ஃபேஸ் பேக்
புதிதாக வெட்டப்பட்ட 10 செம்பருத்தி பூக்களை எடுத்துக் கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்றாக சூடானதும் அதில் செம்பருத்தி பூவை சேர்த்து கொள்ளவும். தீயை குறைவாக வைத்துக் கொள்ளுங்கள். 15 நிமிடம் கழித்து அதை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். இப்போது உங்களுக்கு செம்பருத்தி பூ ஒரு ஜெல் போல் கிடைக்கும்.
செம்பருத்திப்பூ ஜெல்லை உங்களது முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இதை உங்களது முகம் மட்டுமல்ல, கை கால் மற்றும் கழுத்தில் கூட தடவலாம். 20 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு குளிர்ந்து நீரால் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் கரைகள், கரும்புள்ளிகள் நீங்கி முகம் பிரகாசமாகும். நீங்கள் குளிப்பதற்கு முன் இதை தொடர்ந்து ஏழு நாள் செய்து வந்தால் 7 நாளில் உங்களது முகம் பளபளப்பாக மாறிவிடும்.
இந்த செம்பருத்தி பூ ஜல்லுடன் முல்தானி மெட்டி சேர்த்து முகத்தில் ஃபேஸ் பேக்காக பயன்படுத்தினால் முகம் பளபளப்பாக இருக்கும். இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தையும் நீக்கிவிடும். இந்த ஃபேஸ் பேக்கை நீங்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
66
தயிர்
செம்பருத்தி பூவுடன் தயிரும் சேர்த்து ஃபேஸ் பேக்காக முகத்தில் பயன்படுத்தினால் முகப்பருவை போக்கும். ஏனெனில் செம்பருத்தி பூவில் இருக்கும் டாக்டர் எதிர்ப்பு பண்புகள் முகப்பருவை ஏற்படுத்தும் கிருமிகளை நீக்கும். மேலும் தயிரில் இருக்கும் புரோபயாடிக்குகள் தெளிவான சருமத்தை மீட்டெடுக்க உதவுகிறது மற்றும் சருமத்தில் சுருக்கம் வருவதை தடுக்க உதவுகிறது.