Summer Beauty Tips : வெயிலில் முகம் கருப்பாகாமல் பளிச்னு இருக்க 4 டிப்ஸ்!!
கோடைக்காலம் வரப்போகுது. ஒவ்வொரு கோடை காலத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். எனவே இந்த நேரத்தில் சருமத்தை சுற்றியிருக்கும் வெயிலிலிருந்து பாதுகாப்பது ரொம்பவே முக்கியம். இல்லையெனில் கருமையாகிவிடும். அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளை மட்டும் பின்பற்றினால் போதும். கோடைகாலத்திலும் உங்களது முகம் பார்ப்பதற்கு பளிச்சென்று இருக்கும்.
25
எலுமிச்சை சாறு மற்றும் தேன்:
கோடை வெயிலிலிருந்து உங்களது முகம் கருப்பாகிவிட்டால், கருமையை நீக்குவதற்கு எலுமிச்சை சாறுடன் தேன் சேர்த்து பயன்படுத்துங்கள். ஏனெனில் இவை இரண்டிலும் ஏராளமான நன்மைகள் உள்ளன. முக்கியமாக இவை முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளை நீக்க உதவும். அதிலும் குறிப்பாக தேன் முகத்தை வரட்சியிலிருந்து காத்து ஈரமாக வைக்க உதவும். இதனால் பருக்கள் வராமல் தடுக்கப்படும். மேலும் முகத்தில் சுருக்கங்கள், வயதான தோற்றம் போன்றவை தள்ளி போகும். எலுமிச்சை சாறு முகத்தில் இருக்கும் அழுக்கு மற்றும் இறந்த செல்களை நீக்கி முகத்தை எப்போதும் மினுமினுப்பாக வைக்க உதவும்.
35
கடலை மாவு மஞ்சள் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்:
கோடைகாலத்திலும் உங்களது முகம் எண்ணெய் பிசுபிசுப்பாக இருக்கிறது என்றால் இந்த ஃபேஸ் பேக் சிறந்த தேர்வாகும். ஆம் இந்த ஃபேஸ் பேக்: முகத்தில் இருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பை முகத்தை பளபளப்பாக வைக்க உதவும். இதற்கு ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் கடலை மாவு, சிறிதளவு தயிர் மற்றும் மஞ்சள் சேர்த்து நன்றாக கலந்து அதை உங்களது முகத்தில் தடவ வேண்டும். சுமார் 10 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு ஜில் வாட்டரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த முறையை நீங்கள் வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால், வெயில் காலத்தில் உங்களது முகம் பளபளப்பாக இருக்கும்.
வெயில் காலத்தில் சிலருக்கு கண், மூக்கு, உதடு பகுதிகளை சுற்றி கருவளையம் தோன்றும் இதைப் போக்க புளித்த தோசை மாவுடன் தக்காளி சேர்த்து முகத்தில் தடவினால் கருமை நீங்க சருமம் பொலிவாக மாறும். அதுபோல உருளைக்கிழங்கை மையாக அரைத்து அதை கருவளையம் இறக்கும் இடத்தில் தடவினால் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பிக்கும்.
கோடைகாலத்தில் முகம் பொலிவாக பீட்ரூட் ஜூஸ், கேரட் ஜூஸ், கற்றாழை ஜூஸ், மற்றும் பிற பழங்களின் ஜூஸ் குடியுங்கள். ரொம்பவே நல்லது. இவை உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.
குறிப்பு : கோடைகாலத்தில் மதியம் 12 மணி முதல் 5 மணி வரை வெளியே செல்வதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். ஏனெனில், இந்த நேரத்தில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.