Beauty Tips : கோடையில் சருமம் குளு குளுனு இருக்க சூப்பரான ஃபேஸ் பேக்..! இப்பவே செய்ங்க..
கோடைக்காலத்தில் சூடாக இருக்கும் உங்கள் சருமத்தை குளிர்ச்சியாக வைக்க ஃபேஸ் பேக் அவசியம். அப்படி குளிர்ச்சியான ஃபேஸ் பேக் பற்றி இங்கு பார்க்கலாம்.

கோடை காலத்தில், வெயில் மற்றும் தூசியால் முகத்தில் எரிச்சல், அரிப்பு மற்றும் சொறி போன்ற பிரச்சினைகளால் நீங்கள் சிரமப்படுகிறீர்கள்...? இதிலிருந்து விடுபட, நீங்கள் லோஷன் போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கு பதிலாக வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே ஃபேஸ் பேக் போட்டுங்கள். முகம் குளிர்ச்சியாக இருக்கும். அதுகுறித்து இங்கு பார்க்கலாம்.
வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காய் உங்கள் சருமத்தை விரைவாக ஹைட்ரேட் செய்து, பளபளப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் வைக்கும். எனவே, முகத்தில் ஏற்படும் எரிச்சலை நீக்க, இந்த ஃபேஸ் பேக் செய்ய முதலில் வெள்ளரிக்காயை நன்கு அரைத்து முகத்தில் தடவி 20-25 நிமிடங்களுக்குப் பிறகு, முகத்தை கழுவுங்கள். முகம் குளிர்ச்சியாக இருக்கும்.
சந்தனம்: சந்தனத்தில் குளிர்ச்சியான தன்மை உள்ளது. எனவே, இந்த ஃபேஸ் பேக் செய்ய, 1 ஸ்பூன் சந்தனப் பொடியுடன் 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து அதை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.
இதையும் படிங்க: Beauty Tips : கோடையில் முகம் பளபளப்பாக ஜொலிக்க வேண்டுமா..? வெள்ளரிக்காய் தண்ணீரை இப்படி யூஸ் பண்ணுங்க!
தர்பூசணி: தர்பூசணி ஃபேஸ் பேக் உங்கள் சருமத்தை ஹைட்ரேட் செய்து குளிர்ச்சி அளிக்கும். தர்பூசணி ஃபேஸ் பேக் செய்ய, அதை நன்றாக மசித்து, உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவுங்கள்.
இதையும் படிங்க: Beauty Tips : கோடையில் வறண்ட சருமம் மென்மையாக 'இந்த' ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க!
உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கு முகத்திற்கு குளிர்ச்சியை தருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இதை செய்ய முதலில், உருளைக்கிழங்கை அரைத்து அதிலிருந்து சாறை எடுத்து அதனுடன் சிறிது பச்சை பாலை சேர்த்து பிறகு பருத்தியின் உதவியுடன் உங்கள் முகம் முழுவதும் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இது சருமத்தை குளிர்ச்சியாக்குவது மட்டுமின்றி, கறைகள் மற்றும் புள்ளிகளை நீக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D