உடல் பருமன் பிரச்சனையால் தற்போது பலரும் அவதிப்படுகிறார்கள் . உடல் எடையை குறைக்க பலரும் பல விதமான முயற்சிகளை செய்கிறார்கள். ஆனால் எவ்வளவு முயற்சித்தும் சிலரால் அவர்கள் விரும்பிய பலனை பெற முடியாமல் போகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், தயிருடன் ஆளி விதைகளை சேர்த்து சாப்பிட்டால் உடல் எடையை வேகமாக குறைத்து விடலாம். இந்த பதிவில் தயிருடன் ஆளி விதையை எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.
25
தயிர் மற்றும் ஆளி விதைகள் :
- தயிரானது குடலை சுத்தப்படுத்த உதவுகிறது. மலச்சிக்கலால் அவதிப்பட்டால் தயிர் சாப்பிடுவது மிகவும் நன்மைக்கும். தயிரில் புரோபயாடிக்குகள் உள்ளன. இது நல்ல பாக்டீரியாக்களை அதிகரித்து செரிமான அமைப்பை பலப்படுத்த உதவுகிறது.
- ஆளி விதைகள் சூப்பர் ஃபுட் ஆகும். ஏனெனில் இது நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஆரோக்கியமான புரதங்கள் மற்றும் தாதுக்களின் நல்ல மூலமாகும். இவை அனைத்தும் நம்முடைய உடலுக்கு எல்லா வகையிலும் நன்மை பயக்கும். இதனால்தான் ஆளி விதைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
35
எடையை குறைக்க ஆளி விதை எவ்வாறு உதவுகிறது?
எடையை வேகமாக குறைக்க ஆளி விதை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இதில் இருக்கும் நார்ச்சத்து வயிற்றை நீண்ட நேரம் நிரம்பி இருக்கும் உணர்வை தரும். இதனால் பசி கட்டுப்படுத்தப்படும். மேலும் ஆளிவிதையில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆனது வீக்கம் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்க பெரிதும் உதவுகிறது.
முதலில் ஒரு கடாயில் 2 ஸ்பூன் ஆளி விதை போட்டு வறுத்து பிறகு அதை பொடியாக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு பாத்திரத்தில் 4 ஸ்பூன் குறைந்து கொழுப்புள்ள தயிரை எடுத்துக் கொள்ளவும் .அதில் பொடியாக்கி வைத்த ஆளிவிதை சேர்த்துக் கொள்ளவும். வேண்டுமானால் சிறிதளவு கல் உப்பு சேர்த்துக் கொள்ளலாம். தினமும் வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டு வந்தால் சில வாரங்களுக்குள் உங்களது எடை குறைய ஆரம்பிக்கும்.
55
யாரெல்லாம் ஆளி விதையை சாப்பிடக்கூடாது?
மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, ஹார்மோன் பிரச்சனை, இரத்தப்போக்கு பிரச்சனை, குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் குறைந்த ரத்த சர்க்கரை பிரச்சனை உள்ளவர்கள் ஆளி விதைகளை எடுக்கும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது.