வீட்டில் தனியாக இருக்கும் போது நெஞ்சுவலி வந்தால் முதலில் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்

Published : May 19, 2026, 01:56 PM IST

வீட்டில் தனியாக இருக்கும்போது நெஞ்சுவலி வந்தால், பயமே ஆபத்தாகிவிடும். அந்த இக்கட்டான 10-15 நிமிடங்களில் பதற்றப்படாமல், புத்திசாலித்தனமாகச் செயல்படுவது உங்கள் உயிரைக் காக்கும். எனவே, முதலுதவி பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியம்.

PREV
15
முதல்ல 'அமருங்கள்', அப்புறம் ஆம்புலன்ஸ்!

நெஞ்சுவலி வந்ததும் பதற்றத்தில் அங்கும் இங்கும் நடக்கக் கூடாது, உடனே தரையில் சாய்ந்து அமருங்கள்! நடக்கும் போது இதயம் அதிக ரத்தத்தைக் கேட்கும்; அது வலியை இன்னும் அதிகமாக்கும். தரையில் அமர்ந்து, முழங்கால்களை மடக்கி, சுவரில் சாய்ந்து கொள்வது (W-Position) இதயத்தின் பாரத்தைக் குறைக்கும். படுக்கக் கூடாது, நேராக நிமிர்ந்து அமர்வது தான் நுரையீரலுக்குக் காற்றை சீராகக் கொண்டு செல்லும்.

25
வீட்டின் மெயின் கதவை 'அன்லாக்' பண்ணுங்க!

ஆம்புலன்ஸுக்கோ அல்லது பக்கத்து வீட்டுக்காரருக்கோ போன் செய்த அடுத்த நொடி, மெயின் கதவைத் திறந்து வையுங்கள்! ஒருவேளை உதவிக்கு ஆட்கள் வரும் போது உங்களுக்கு மயக்கம் ஏற்பட்டால், அவர்கள் கதவை உடைக்க நேரம் வீணாகக் கூடாது. கதவு திறந்திருந்தால் அவர்கள் உடனே உள்ளே வர முடியும். வீட்டின் பூட்டைத் திறந்து போட்டுவிட்டு, மெயின் கதவுக்கு அருகிலேயே தரையில் அமர்ந்து கொள்வது இன்னும் பாதுகாப்பானது.

35
ஆஸ்பிரின் மாத்திரையை 'மெல்லுங்கள்'

வீட்டில் 325mg ஆஸ்பிரின் (Aspirin) மாத்திரை இருந்தால், அதை தண்ணீரோடு விழுங்கக் கூடாது! மாத்திரையை வாயில் போட்டு நன்றாக மென்று உமிழ்நீரோடு விழுங்க வேண்டும். இப்படிச் செய்யும் போது மாத்திரை ரத்தத்தில் வேகமாகச் கலந்து, இதயத் தமனிகளில் ஏற்படும் ரத்தக் கட்டை (Blood Clot) உடனடியாகக் கரைக்கத் தொடங்கும். உங்களுக்கு ஆஸ்பிரின் அலர்ஜி இருந்தால் அல்லது அல்சர் இருந்தால் இந்த மாத்திரையைத் தவிர்க்கவும்.

45
மெதுவாக மூச்சு விடுங்கள்

நெஞ்சுவலி வந்தால் "வேகமாக இருமினால் உயிர் பிழைக்கலாம்" என்ற வாட்ஸ்அப் வதந்தியை நம்பி உடம்பை வருத்திக் கொள்ளாதீர்கள்! தேவையில்லாமல் வேகமாக இருமுவது இதயத்துடிப்பை தாறுமாறாக்கி ஆபத்தை அதிகரிக்கும். அதற்குப் பதிலாக, மூச்சை மூக்கு வழியாக மெதுவாக இழுத்து வாய் வழியாக மெதுவாக வெளிவிடுங்கள். உடம்பை ரிலாக்ஸாக வைத்திருப்பது மட்டுமே இதயத்திற்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவை சீராக வைத்திருக்கும்.

55
நீங்களாகவே வண்டி ஓட்டக் கூடாது!

"நானே பைக் ஓட்டி ஹாஸ்பிடல் போயிடுறேன்" என்று ஒருபோதும் சாகசம் செய்ய நினைக்காதீர்கள்! வலி இருக்கும் போது வண்டி ஓட்டினால் நடுவழியில் மயக்கம் வரலாம், அது பெரிய விபத்திற்கு வழிவகுக்கும். ஆம்புலன்ஸ் வர லேட் ஆனால், பக்கத்து வீட்டுக்காரரையோ அல்லது டாக்ஸியையோ கூப்பிடுங்கள். காரின் பின் சீட்டில் சாய்ந்து படுத்துக் கொண்டு அவசர சிகிச்சைப்பிரிவு (ER) உள்ள பெரிய மருத்துவமனைக்கு உடனே செல்லுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories