High BP ஹை பீபி இருக்கா? இந்த 5 தவறுகளை மட்டும் கண்டிப்பாக செய்யாதீங்க

Published : May 19, 2026, 11:55 AM IST

உயர் ரத்த அழுத்தம் (High BP) உள்ளவர்கள், தங்களின் சில சாதாரண தினசரி பழக்கவழக்கங்களால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் மறந்தும் கூட செய்யக்கூடாத, கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டிய 5 முக்கியமான தவறுகளைப் பற்றி இனிப் பார்ப்போம்.

PREV
15
'மறைந்திருக்கும் உப்பு'

சமையலில் உப்பைக் குறைச்சிட்டோம்னு நினைச்சு நிம்மதியா இருக்கீங்களா? அங்கேதான் தப்பு பண்றீங்க. ஊறுகாய், அப்பளத்தை மட்டும் தவிர்த்தால் போதாது. பிஸ்கட், பிரெட், சாஸ், மற்றும் 'ரெடி-டு-ஈட்' உணவுகளில் பிரசர்வேட்டிவ்ஸாக சோடியம் கொட்டிக் கிடக்கிறது. எந்த பாக்கெட் உணவு வாங்கும் போதும் அதன் பின்னாடி இருக்கும் சோடியம் (Sodium) அளவை செக் பண்ணுங்க!

25
பிபி குறைஞ்சிருச்சுனு நினைப்பது

"இப்போ பிபி நார்மலா தான் இருக்கு, அப்புறம் ஏன் தினமும் மாத்திரை போடணும்?" - இந்த ஓவர் கான்ஃபிடன்ஸ் வேண்டாமே. பிபி மாத்திரைகள் என்பது காய்ச்சல் மாத்திரை போல அல்ல. நீங்கள் மாத்திரை சாப்பிடுவதால் தான் பிபி கட்டுப்பாட்டில் இருக்கிறது. நீங்களாகவே மாத்திரையை நிறுத்தினால், பிபி திடீரென 'ஸ்பைக்' ஆகி ஆபத்தை ஏற்படுத்தும். டாக்டர் சொல்லாமல் பிபி மாத்திரை எண்ணிக்கையை குறைக்கவோ, நிறுத்தவோ கூடாது!

35
தூக்கமின்மை

நள்ளிரவு வரை ரீல்ஸ் பார்ப்பது, வெப் சீரிஸ் பார்ப்பது.. பிபி காரர்களுக்கு இது ரொம்பவே டேஞ்சர்! நாம் தூங்கும் போதுதான் நம் உடலின் ரத்த அழுத்தம் இயற்கையாகவே குறையும். தொடர்ந்து 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் போது, ரத்த நாளங்கள் சுருங்கி பிபி தானாகவே எகிறத் தொடங்கும். இரவு 10 மணிக்கு மேல் போனை ஓரமாக வைத்துவிட்டு, நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்திற்கு மாறுங்கள்.

45
செக்-அப் செய்யாமல் இருப்பது

"எனக்கு தலைவலியோ, மயக்கமோ இல்லை.. அப்புறம் ஏன் சும்மா சும்மா பிபி செக் பண்ணணும்?" என நினைக்காதீங்க.ஹை பிபி-க்கு "சைலண்ட் கில்லர்" என்றே பெயர். எந்த ஒரு அறிகுறியும் காட்டாமல், உள்ளுக்குள்ளே இதயத்தையும் சிறுநீரகத்தையும் இது டேமேஜ் செய்யும். மாதத்திற்கு ஒருமுறையாவது பிபி அளவை செக் செய்வது உங்களை பெரிய ஆபத்துகளில் இருந்து காப்பாற்றும்.

55
கோபத்தை விட ஆபத்து

பிபி-க்கு கோபம் மட்டும்தான் காரணம்னு நினைச்சா தப்பு. ஒரே இடத்தில் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பது அதைவிட ஆபத்து! உடற்பயிற்சியே இல்லாமல் சோஃபாவிலும், நாற்காலியிலும் முடங்கிக் கிடக்கும் போது ரத்த நாளங்கள் தன் நெகிழ்வுத்தன்மையை இழக்கின்றன. இதனால் இதயம் அதிக அழுத்தம் கொடுத்து ரத்தத்தை பம்ப் செய்ய வேண்டியதாகிறது. தினமும் வெறும் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பாக நடைப்பயிற்சி செய்தாலே பிபி எகிறாது.

Read more Photos on
click me!

Recommended Stories