வெயில் காலத்துல கூட 'டீ' இல்லாம இருக்க முடியலயா? இந்த பாதிப்பு வரும் உஷாரா இருங்க!!
நீங்கள் டீ பிரியராக இருந்தால் இந்த கொளுத்தும் வெயிலில் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். அது ஏன் என்பதற்கான காரணங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நீங்கள் டீ பிரியராக இருந்தால் இந்த கொளுத்தும் வெயிலில் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். அது ஏன் என்பதற்கான காரணங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Disadvantages Of Drinking Tea In Summer : நம்மில் பெரும்பாலானோர் தங்களது நாளை ஒரு கப் டீயுடன் தான் தொடங்க விரும்புகிறார்கள். காலை எழுந்தவுடன் ஒரு கப் டீ குடிக்காமல் எந்த ஒரு வேலை மற்றும் செயல்களிலும் ஈடுபட மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், டீ மீதான ஏக்கம் கொளுத்தும் வெயிலிலும் கூட அவர்களால் அதை விட்டுவிட முடியாத அளவுக்கு அதிகமாகவே உள்ளது. ஒரு நாளைக்கு 3-4 கப்புக்கு மேல் டீ குடிப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். டீ அவர்களுக்கு ஒரு போதை பழக்கமாகிவிட்டதால் அவர்களால் அதை விட்டு விட முடியாது.
ஆனால் உங்களுக்கு தெரியுமா? கோடை காலத்தில் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதன் நன்மைகளை விட தீமைகள் தான் அதிகம். டீயால் வாயு, அஜீரணம், புளிப்பு ஏப்பம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சரி இப்போது கோடையில் டீ குடிப்பதால் ஆரோக்கியத்திற்கு என்னென்ன தீங்குகள் ஏற்படும் என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
டீயில் இருக்கும் காஃபின் தூக்கத்தை பாதிக்கும் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. கோடையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் இரவு சரியாக தூங்க முடியாமல் போகும். கூடவே, டீயும் குடித்தால் தூக்கமின்மை பிரச்சினை மேலும் மோசமாக பாதிக்கப்படும்.
பொதுவாக கோடை வெயில் தாக்கத்தால் சருமம் வறட்சி அடையும் இதனால் அரிப்பு, எரிச்சல் போன்ற பல சரும பிரச்சனைகள் ஏற்படும். கூடுதலாக, டீயில் இருக்கும் காப்ஃபைன் சரும பிரச்சனையை மேலும் அதிகரிக்க செய்யும்.
இதையும் படிங்க: நீங்களும் அடிக்கடி காபி, டீ குடிப்பவரா? இந்த பிரச்சனைகள் பற்றி தெரிஞ்சுக்கோங்க!
கோடை வெப்பத்தின் காரணமாக இதயத்தில் அழுத்தம் அதிகரிக்கும். கூடுதலாக, டீயில் இருக்கும் காஃபின் இதயத்துடிப்பை அதிகரிக்கழ் செய்து இதய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
இதையும் படிங்க: டீயும் பிஸ்கட்டும் சாப்பிட நல்லா தான் இருக்கும்! ஆனா இந்த ஆபத்தான பிரச்சனைகள் வரும்!
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் உடலில் நீர்ச்சத்து குறைந்து விடும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனை அதிகரிக்கும். இத்தகைய சூழ்நிலையில், டீ குடித்தால் அதில் இருக்கும் டானின்கள் மலச்சிக்கல் பிரச்சனையை மோசமடையச் செய்யும்.
கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் இதன் காரணமாக மன அழுத்தம் அதிகரிக்கும். கூடுதலாக டீ குடித்து வந்தால் அதில் இருக்கும் காஃபின் பதற்றத்தை இன்னும் அதிகரிக்க செய்யும்.