யூரிக் ஆசிட் பிரச்சனையா? சம்மர்ல இந்த 6 பழங்களை சாப்பிட மறக்காதீங்க!
யூரிக் ஆசிட் பிரச்சனை உள்ளவர்கள் கோடைகாலத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய சில பழங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
யூரிக் ஆசிட் பிரச்சனை உள்ளவர்கள் கோடைகாலத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய சில பழங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
Summer Fruits That Help Control Uric Acid : நம்முடைய ஒட்டுமொத்த உடலில் யூரிக் ஆசிட் அளவு சீராக இருக்க வேண்டும். ஆனால் தற்போது யூரிக் அமிலம் அதிகரிப்பது ஒரு பொதுவான பிரச்சனையாகி விட்டது இதன் விளைவாக மூட்டு வலி வீக்கம் நடப்பதில் சிரமம் சிறுநீரக கற்கள் சோர்வு பசியின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில், தற்போது கோடை காலம் என்பதால் உணவு பழக்கவழக்கங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் உடல் விரைவாக நீரிழப்புக்கு ஆளாகிவிடும். இதனால் யூரிக் அமிலத்தின் அளவு மேலும் அதிகரிக்கும்.
அத்தைகய சூழ்நிலையில், சில பருவகால பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அவை உடலை குளிர்விப்பது மட்டுமல்லாமல், யூரிக் அமிலத்தின் அளவை இயற்கையாகவே கட்டுப்படுத்த உதவும். எனவே, யூரிக் அமிலத்தை இயற்கை முறையில் குறைக்க உதவும் 6 கோடைகால பழங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: உடலில் யூரிக் அமில அளவை குறைக்கும் '5' காலை பழக்கங்கள்!!
யூரில் அமிலத்தை கட்டுப்படுத்த உதவும் 6 கோடைகால பழங்கள்:
தர்பூசணி - தர்பூசணையில் அதிக அளவு நீர்ச்சத்து உள்ளதால் இது உங்களது உடலில் நீரேற்றமாக வைத்திருக்கும். மேலும் சிறுநீர் வழியாக யூரிக் அமிலத்தை வெளியேற்றும். தர்பூசணி உடலை நச்சு நீக்கம் செய்து, கோடையில் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது.
மாம்பழம் - மாம்பழம் சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும், இதில் சிட்ரிக் அமலம் உள்ளதால் இதில் யூரிக் அமிலத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது. ஆனால் யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்கள் மாம்பழத்தை குறைந்த அளவில் சாப்பிட்ட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: இந்த பிரச்சனை மூட்டுகளில் வலியை ஏற்படுத்துதா? நீங்க சாப்பிடக் கூடாத '7' உணவுகள்
செர்ரி - செர்ரிகளில் ஆக்சிஜனேற்ற மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் அவை யூரிக் அமிலத்தை குறைக்கவும், மூட்டு வலி, வீக்கத்தை குறைக்கவும் பெரிதும் உதவுகின்றதும் எனவே தினமும் 10 அல்லது 12 செர்ரிகளை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.
முலாம்பழம் மற்றும் வெள்ளரிக்காய் - இவை இரண்டிலும் நீர் மற்றும் நார்ச்சத்து அதிக அளவு நிறைந்துள்ளதால், இவை உடலில் குளிர்வித்து சிறுநீர் வழியாக யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவும். எனவே, கோடையில் வெள்ளரிக்காய் மற்றும் முலாம் பழத்தை தினமும் சாப்பிடுங்கள்.
பப்பாளி - பப்பாளியில் இருக்கும் நொதிகள் செரிமானத்தை மேம்படுத்தி, யூரிக் அமிலத்தின் அளவை கட்டுப்படுத்த உதவும். இதனால் மூட்டு வலி மற்றும் வீக்கம் குறையும்.
நினைவில் கொள் :
- கோடையில் நிறைய தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள் அப்போதுதான் உடலில் இருந்து யூரிக் அமிலம் வெளியேற்றப்படும்.
- சர்க்கரை சேர்க்காமல் பழங்களை சாப்பிடவும்
- வருத்தம் மற்றும் அதிக புரதம் கொண்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்
- தினமும் லேசான உடற்பயிற்சி செய்யுங்கள்.