பாதாம் பிசின் ஆரோக்கிய நன்மைகள் :
எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது - பாதாம் பிசினில் கால்சியம், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. எனவே இதை சாப்பிடுவதன் மூலம் மூட்டு தேய்மானம், மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படும்.
உடலை நீரேற்றமாக வைக்கும் - பாதாம் பிசின் நீரை தக்க வைக்கும் திறனை கொண்டது. இதை ஊற வைக்கும் போது தண்ணீரை உறிஞ்சி ஜெல் போன்று உருவாகும். இதை சாப்பிட்டால் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக கோடை காலத்தில் ஏற்படும் நீரிழிப்பு அபாயம் அதிகரிப்பதை தடுக்கும்.
ஆற்றல் வழங்கும் - பாதாம் பிசின் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும். மேலும் சோர்வைப் போக்கி, மனநலத்தை மேம்படுத்தும். இதில் இருக்கும் புரதச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் உடல் வளர்ச்சியை மேம்படுத்தும் மற்றும் திசுக்களை புதுப்பிக்கும்.