பொய்யான 'வாக்கிங்' கட்டுக்கதைகளும் உண்மைகளும்!! 

Published : Apr 14, 2025, 08:18 AM ISTUpdated : Apr 14, 2025, 09:24 AM IST

வாக்கிங் செல்வது பற்றி பரவலாக பேசப்படும் கட்டுக்கதைகளையும் உண்மைகளையும் காணலாம். 

PREV
17
பொய்யான 'வாக்கிங்' கட்டுக்கதைகளும் உண்மைகளும்!! 

Walking Myths and Weight Loss : உடற்தகுதியை பேண உதவும் எளிய பயிற்சியே நடைபயிற்சி. தினமும் நடப்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. ஆனால் நடைபயிற்சி குறித்து பல கட்டுக்கதைகளும் உலவுகின்றன. இந்த கட்டுக்கதைகளை நம்பி சிலர் நடப்பதையே கைவிடுகின்றனர். இந்தப் பதிவில் உடற்தகுதி, எடை குறைப்புக்கு தொடர்புடைய   கட்டுக்கதைகள் குறித்து காணலாம். 

27
Walking for Burn fat!

கொழுப்பு எரிக்க! 

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை எரிக்க தீவிரமான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என மக்களிடம் ஒரு எண்ணம் உள்ளது. ஆனால் நாள்தோறும் நடைபயிற்சி மேற்கொள்வது அதிக அளவில் கலோரிகளை எரித்து கொழுப்பை கரைக்க உதவுகிறது. நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு தினமும் நடைபயிற்சி மேற்கொண்டால் நிலையான எடை குறைப்பு இலக்கை அடைய முடியும். 

37
Normal Walking

சாதாரண பயிற்சி: 

பலர் நடைப்பயிற்சியை சாதாரணமான பயிற்சியாக கருதுகிறார்கள். ஆனால் அது கார்டியோ வகையை சேர்ந்த சிறந்த பயிற்சி. தினமும் நடைப்பயிற்சி செய்தால் கலோரிகளை எரிப்பதோடு,  தசையை உருவாக்கவும் உதவுகிறது. இதய ஆரோக்கியம் மேம்படும். அனைத்து வயதினரும் செய்ய முடியும். 

47
Walking for 10 thousand steps:

10 ஆயிரம் காலடிகள்: 

உடல் ஆரோக்கியத்திற்கு 10,000 காலடிகள் தான் நடக்கவேண்டும். ஆனால் அப்ப்படியல்ல. நீங்கள் ஒருநாளில் 2500 காலடிகள் தொடங்கி 6,000 முதல் 8,000 காலடிகள் வரை கூட நடக்கலாம். இதில் எடை இழப்பு இருக்கும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. இதனுடன் சரியான உணவு, வலிமை பயிற்சிகள் செய்தால் ஃபிட்டாக இருக்கலாம்.   

இதையும் படிங்க: உடல் எடை குறைய! வெறும் வயிற்றில் தான் வாக்கிங் போகனுமா? 

57
Short vs long walk:

குறுநடை vs நீண்ட நடை: 

நீண்ட நேரம் நடைபயிற்சியை போலவே குறுநடையும் நல்ல பலன்களைத் தரும். ரொம்ப தூரம் நடப்பது மட்டுமே நல்லது என மக்களிடையே இருக்கும் எண்ணம் உண்மையானதல்ல. தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் வாக்கிங் செல்வது ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது.  உடலின் ஆற்றல் அளவுகளை அதிகரித்து கலோரிகள் எரிவதை அதிகப்படுத்துகிறது. இதனால் நாள் முழுக்க மந்தமாக இல்லாமல் சுறுசுறுப்பாக இருக்க முடியும். 

இதையும் படிங்க:  தினமும் எவ்வளவு 'காலடிகள்' நடந்தால் கொழுப்பு ஈஸியா குறையும்?  இந்த 'ட்ரிக்' தெரியுமா?

67
Speed ​​vs Medium Speed Walking

வேகம் vs மிதவேகம்: 

விறுவிறுப்பான நடைபயிற்சி இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இதயத் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது.  அதேபோல மெதுவாக நடப்பது மன ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. இதனால் ரத்த ஓட்டம் சீராகிறது.  மூட்டுகளில் ஆரோக்கியம் மேம்படுகிறது. நீங்கள் எவ்வளவு வேகத்தில் நடக்கிறீர்கள் என்பதைவிட தொடர்ச்சியாக தினமும் நடைபயிற்சி செல்வதை பழக்கப்படுத்திக் கொள்வதை சிறந்த நடவடிக்கையாக இருக்கும். 

77
Walking for Weight Loss

எடை இழப்பு: 

தினமும் வாக்கிங் செல்வது உங்களுடைய எடையை குறைக்க உதவுகிறது. ஆனால் நீங்கள் உணவு பழக்கத்தை மாற்றிக் கொள்ளாமல் முழு பலன்களை பெற முடியாது. துரித உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், இனிப்பு வகைகள் என ஆரோக்கியமில்லாத உணவுகளை அதிகமாக சாப்பிட்டுக் கொண்டே தினமும் நடைபயிற்சி செல்வது உங்களுக்கான பலன்களை பெற்றுத் தராது. பழங்கள், காய்கறிகள், வீட்டு உணவுகள், தானியங்கள் என ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிடுவது உங்களுடைய ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும், ஆற்றல் அளவுகளிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

Read more Photos on
click me!

Recommended Stories