கோடை வெயிலில் வரும் வயிற்று வலிக்கு உடனடி நிவாரணம் தரும் 5 வழிகள்

Published : Apr 17, 2025, 05:27 PM ISTUpdated : Apr 17, 2025, 05:31 PM IST

கோடைகாலத்தில் வரும் வயிற்று வலியால் அவதிப்படுகிறீர்கள் என்றால் அதிலிருந்து உடனடி நிவாரணம் தரும் 5 வழிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

PREV
15
கோடை வெயிலில் வரும் வயிற்று வலிக்கு உடனடி நிவாரணம் தரும் 5 வழிகள்

Ways To Get Rid of a Stomach Ache During Summer : கோடை காலம் வந்தாலே பலருக்கும் பல உடல்நல பிரச்சினைகள் கூடவே வந்துவிடும். அதுவும் குறிப்பாக, வாந்தி, பேதி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இந்த சீசனில் நம்மை வாட்டி வதைப்பது வதைக்கும். ஆனால், இப்படி கோடைகாலத்தில் ஏன் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் அதிகமாக வருகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

25
Tips for Stomach Pain Relief in Summer

கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்து விடும். அதுமட்டுமில்லாமல் உணவு பழக்கங்களும் இந்த சீசனில் மாறிவிடும் இந்த இரண்டு காரணிகளும் சேர்ந்துதான் வயிற்று பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது அமைகின்றது என்று அவர்கள் சொல்லுகின்றன. இது தவிர அதிக வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் நீரழிப்பு பிரச்சனைகள் செரிமான அமைப்பு பாதிக்கப்படும். மேலும் கோடைக்கு ஏற்ற உணவுகளை சாப்பிடவில்லை என்றால் வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும். எனவே கோடைகாலத்தில் அதிக வெப்பத்திலும் உங்களது வயிற்றை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம். 

இதையும் படிங்க:  யூரிக் ஆசிட் பிரச்சனையா? சம்மர்ல இந்த 6 பழங்களை சாப்பிட மறக்காதீங்க!

35
Tips for Stomach Pain Relief in Summer

கோடை வெயிலுக்கு வரும் வயிற்று வலியிலிருந்து நிவாரணம் தரும் 5 வழிகள் :

1. அதிக தண்ணீர் குடி : கோடையில் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். ஏனெனில் வெயிலின் தாக்கத்தால் உடலில் இருக்கும் நீர் வியர்வை மூலமாக வெளியேறுவதால், தினமும் 10 கிளாஸ் தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம்.

2. கோடை உணவுகள் : கோடை காலத்தில் கஞ்சி, சாலட் போன்ற உணவுகளை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அவை செரிமானத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல், வயிற்றுக்கும் விதமாக இருக்கும். முக்கியமாக காரம் மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில், வயிற்று உபாதைகள் ஏற்படும். 

45
Tips for Stomach Pain Relief in Summer

3. சுகாதாரமான உணவு : கோடையில் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் வேகமாக பரவுவதால் உணவில் சுகாதாரத்தை பேணுவது மிகவும் அவசியம். எனவே கோடையில் நீங்கள் சாப்பிடும் உணவு சுகாதாரமாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் வயிற்று உபாதைகள் வருவது தடுக்கப்படும்.

4. வெளிப்புற உணவுகளை சாப்பிடாதே!  

வெயில் காலத்தில் முடிந்தவரை வெளியில் விற்கப்படும் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். ஏனெனில் வெப்பத்தின் தாக்கத்தால் செரிமானம் சற்று பலவீனமாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் வெளியில் விற்கப்படும் உணவுகள் சாப்பிடுவது எளிதில் ஜீரணம் ஆகாமல் வயிற்றுப் பிரச்சனைகளை ஏற்படும்.

 

55
Tips for Stomach Pain Relief in Summer

5. மன அழுத்தம் : கோடையில் வைத்த ஆரோக்கியமாக வைக்க மனஅழுத்தம் இல்லாமல் இருப்பது முக்கியம். இதற்கு யோகா, தியானம், உடற்பயிற்சி போன்ற பயிற்சிகளில் ஈடுபடுங்கள் மன அழுத்தம் குறைந்து, செரிமான மேம்படுத்தப்படும்.

இதையும் படிங்க:  Summer Tips: உடல் சூட்டை தணிக்க 1 ஸ்பூன் பாதாம் பிசின் போதும்!! எப்படி சாப்பிடனும்?

Read more Photos on
click me!

Recommended Stories