
Why Do I Feel Sleepy After Drinking Tea? : இந்தியாவில் பெரும்பாலானோர் ஒரு கப் டீயுடன் தங்களது நாளை தொடங்க விரும்புகிறார்கள். பொதுவாக நம்மில் பெரும்பாலானோர் காலை மற்றும் மாலை வேளையில் டீ குடிப்போம். ஆனால் சிலரோ ஒரு நாளைக்கு 7-10 முறைக்கு மேல் டீ குடிப்பார்கள். அந்த அளவிற்கு டீக்கு அவர்கள் அடிமையாக இருக்கிறார்கள்.
இப்படி அவர்கள் டீக்கு அடிமையாக இருப்பதற்கு முக்கிய காரணம் அதில் இருக்கும் காஃபின் தான். டீயில் இருக்கும் இந்த காஃபின் ஒரு விதத்தில் மூளையை சுறுசுறுப்பாக்கினாலும், மற்றொரு விதத்தில் மந்தமாக்குகிறது. பொதுவாக டீ கொடுத்தால் சுறுசுறுப்பாக இருப்போம் என்று சொல்லுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அதில் சேர்க்கப்படும் சர்க்கரை நம்மை மந்தமாக்குகிறது தெரியுமா? இதுகுறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக நாம் சோர்வாக இருக்கும் போது டீ குடிப்போம். அப்போதுதான் சுறுசுறுப்பாக மாறுவோம் என்று நினைப்போம். ஆனால், நீங்கள் நினைப்பதற்கு மாறாக, தூக்கம் வந்தாலோ அல்லது மந்தமாக உணர்ந்தாலோ நிச்சயம் நிச்சயம் கவலைப்பட வேண்டிய விஷயம். ஆனால் இப்படி உங்களுக்கு நடந்தால் அது ஏன்? அதற்கான காரணம் என்ன? என்று நீங்கள் யோசிக்காமல் பதட்டப்பட வேண்டிய அவசியமில்லை.
இதையும் படிங்க: வெயில் காலத்துல கூட 'டீ' இல்லாம இருக்க முடியலயா? இந்த பாதிப்பு வரும் உஷாரா இருங்க!!
முன்பே சொன்னது போல டீயில் சேர்க்கப்படும் சர்க்கரை தான் சில சமயங்களில் டீ குடித்த பிறகும் உங்களுக்கு தூக்கத்தை ஏற்படுத்தும் அல்லது மந்தமாக உணர வைக்கும். எப்படியெனில், டீயில் சேர்க்கப்படும் சர்க்கரை உடனடியாக ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு, இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும். இதன் விளைவாக தான் டீ குடித்த பிறகும் தூக்கம், சோர்வு, மந்த உணர்வு, மயக்கம் ஏற்படக்கூடும். எனவே நீங்கள் டீ குடித்த பிறகும் இந்த மாதிரி நடக்கிறது என்றால், அது குறித்து அஞ்சத் தேவையில்லை.
இதையும் படிங்க: காலை எழுந்ததும் 'டீ' குடிப்பவர்கள் தெரியாமல் பண்ற விஷயம்.. உடனே மாத்துங்க!!
சர்க்கரையால் தூக்கம் வருவது ஏன்?
சர்க்கரை என்பது ஆற்றல். டீ குடித்தால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும். அதற்கு மாறாக தூக்கம் வருகிறது என்றால் நம்முடைய உடலில் ஏற்கனவே சர்க்கரையின் அளவு சீராக இருக்கிறது என்று தான் அர்த்தம். டீ குடித்த பிறகு உடலில் சேரும் சர்க்கரை அளவை சரி செய்ய உடலானது அதிக உழைக்க வேண்டியிருக்கும். இதன் காரணமாக தான் டீ குடித்த பிறகும் நம் சோர்வடைகிறது.
டீ குடித்த பிறகும் தூக்கம் வருவதை தடுக்க அதிக சர்க்கரை உள்ள உணவுகளை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது கலோரிகளை குறைக்க வேண்டும். அதுபோல டீயில் இருக்கும் எல்-தியானைன் என்ற கலவையானது தூக்கத்தை ஏற்படுத்தும். எனவே நீங்கள் டீ குடிக்கும் போது வழக்கமாக சேர்க்கும் சர்க்கரையின் அளவைவிட குறைவாக சேர்த்துக் கொண்டால் மட்டுமே டீ குடித்த பிறகு உங்களுக்கு தூக்கம் வராது.
இதையும் ட்ரை பண்ணுங்க..
டீயில் சர்க்கரை போடுவதற்கு பதிலாக, பாலில் இனிப்பை அதிகரிக்கலாம் அதாவது பாக்கெட் பாலில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று ஃபுல் மில்க், மற்றொன்று ரெகுலர் மில்க். இதில் ஃபுல் மீல்கில் 6% கொழுப்பும், ரெகுலர் மீல்கில் 3% மட்டுமே கொழுப்பு உள்ளது. இவை இரண்டில் நீங்கள் ஃபுல் மில்க் வாங்குங்கள். இந்த வகை பாலில் டீ போட்டு குடித்தால் சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது.
குறிப்பு : மேலே சொன்ன குறிப்புகள் பின்பற்றியும் டீ குடித்த பிறகும் தூக்கம் வருகிறது என்றால் நீங்கள் ஒரு நாளைக்கு கண்டிப்பாக 7-8 மணி நேரம் தூங்க வேண்டும்.