வயசானவங்க வெறும் '5' நிமிஷங்கள் பின்னோக்கி நடப்பதால் இத்தனை நன்மைகளா?  

Published : Apr 17, 2025, 08:23 AM ISTUpdated : Apr 17, 2025, 08:35 AM IST

வெறும் 5 நிமிடங்கள் பின்னோக்கி நடந்து செல்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம். 

PREV
17
வயசானவங்க வெறும் '5' நிமிஷங்கள் பின்னோக்கி நடப்பதால் இத்தனை நன்மைகளா?  

Benefits of Walking Backwards : வழக்கமான நடைபயிற்சியை விட பின்னோக்கி நடப்பது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.  உங்களுடைய வழக்கமான உடல் செயல்பாடுகளை சவாலுக்கு உட்படுத்தும் பயிற்சியாகவே பின்னோக்கி நடப்பது கருதப்படுகிறது.  இதனால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்தும், ஏன் வெறும் ஐந்து நிமிடங்களாவது ஒரு நாளுக்கு பின்னோக்கி நடப்பது அவசியம் என்பது குறித்தும் இந்த பதிவில் காணலாம். 

27
Brain Health

மூளையின் செயல்பாடு:  

பின்னோக்கி நடப்பதால் உங்களுடைய மூளையில் ஒருங்கிணைப்பு மற்றும் சமநிலை ஆகியவை சவாலுக்கு உட்படுத்தப்படுகிறது.  முன்னோக்கி நடப்பதை விடவும் பின்னோக்கி நடப்பதால் மூளை அதிகமாக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இதனால் உங்களுடைய கவனம் கூர்மைப்படுத்தப்படுகிறது.  மனதை ஒருநிலைப்படுத்தி கவனச்சிதறல் அடையாமல் இருக்க பின்னோக்கி நடப்பது உதவியாக இருக்கும்.   

37
Muscle strength:

தசைகள் வலிமை: 

முன்னோக்கி நடப்பதை காட்டிலும் பின்னோக்கி நடப்பதால் தொடை எலும்புகள், கன்றுகள் (calves), பிட்டம் அதிகமாக இயங்கும்.   தசை வளர்ச்சி அதிகமாகும்.  காயம் ஏற்படுவதைக் குறைக்கிறது. 

47
Posture will improve.

தோரணை மேம்படும்: 

உடலுக்கு சமநிலை கிடைக்கிறது. நீங்கள் கூன் விழுந்த தோற்றத்தில் நடப்பதை சரி செய்வதற்கு இந்த பயிற்சி உதவியாக இருக்கும். நிமிர்ந்த தோற்றம் அளிக்கும். மையத் தசைகளை செயல்படுத்தும். 

இதையும் படிங்க:  கெட்ட கொழுப்பை குறைக்க ஒருவர் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்? 

57
weight loss

எடை இழப்பு; 

எடை இழப்புக்காக நடைபயிற்சி செய்பவர்கள் பின்னோக்கி நடப்பதையும் பழக்கப்படுத்திக் கொண்டால் அதிகமான கலோரிகளை எரிக்க முடியும். நீங்கள் முன்னோக்கி நடப்பதற்கு நடுவில் ஐந்து நிமிடங்கள் பின்னோக்கி நடந்து விட்டு மீண்டும் முன் நோக்கி நடப்பதை வழக்கப்படுத்தலாம். எடை இழப்புக்கு உதவும். 

இதையும் படிங்க: தினமும் 1 கிமீ வாக்கிங்!! வெறும் 15 நிமிஷத்தில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா? 

 

67
Benefits of Walking Backwards

வயதானவர்களுக்கு நல்ல பயிற்சி; 

வயதானவர்ளுக்கு ஏற்படும் தடுமாற்றத்தைக் குறைக்க உதவும். உடலை ஒருங்கிணைப்பு, சமநிலையுடன் வைம்ம உதவும். அதனால் தடுமாறி கீழே விழும் அபாயங்கள் குறையும். பின்னோக்கி நடப்பது முழங்கால் அழுத்தத்தை குறைத்து மூட்டு வலியை நீக்கும். கீல்வாதம்  அல்லது காயத்திலிருந்து குணமாகும் நபர்கள் நிச்சயம் செய்ய வேண்டிய பயிற்சி.  

77
Benefits of Walking Backwards

தடகள செயல்திறன்: 

விளையாட்டு வீரர்கள் இதை தினமும் செய்தால் சுறுசுறுப்பு மேம்படும். உடற்பயிற்சிகளுக்கு பின்னர் பின்னோக்கி நடந்தால் தசைகள் இலகுவாக உணரும்.  கால்களுக்கு நல்ல பயிற்சி.

Read more Photos on
click me!

Recommended Stories