வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் 5 மருத்துவ நன்மைகள்..!!

First Published | Feb 28, 2023, 11:05 PM IST

எல்லாவிதமான காய்கறிகளுக்கும் அதனதன் ஆரோக்கிய நன்மைகள் என்று இருக்கின்றன. அந்த வகையில், வெங்காயத்தின் சில ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். அதுவும் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை அறிந்திடலாம்.
 

உலகளவில் வெங்காயம் என்பது ஒவ்வொரு வீடுகள், உணவுக் கடைகளில் சமையலுக்கு தினமும் பயன்படுத்தக் கூடிய காய்கறியாகும். நாம் வழக்கமாக சமைக்கும் பெரும்பாலான சமையல்களில் வெங்காயம் முக்கியமாக இடம்பெற்றிருக்கும். இது தவிர சாலட்களிலும், சட்னி, பொரியல் போன்ற உணவுகளிலும் வெங்காயம் சேர்க்கப்படுகிறது. எந்தவொரு காய்கறிக்கும் அதன் சொந்த ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அந்த வகையில், வெங்காயத்தின் சில ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி தெரிந்துகொள்வோம். வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் இந்த நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. 
 

தற்காப்பு தரும் வெங்காயம்

வெங்காயத்தில் 'ப்ரீபயாடிக்ஸ்' மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இது வைரஸ்கள் போன்ற நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடுவதற்குரிய வேண்டிய ஆற்றலை உடலுக்கு தருக்கிறது.

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வெங்காயம்

வெங்காயத்தில் கணிசமான அளவு ஆண்டிஆக்சிடண்டுகள் உள்ளன. இது கொலஸ்ட்ரால் உள்ளிட்ட இதய பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. அந்த வகையில், இதை தினமும் சாப்பிட்டு வந்தால் இருதயம் பாதுகாப்பாக இருக்கும். 
 

Latest Videos


கண் ஆரோக்கியம் காக்கும் வெங்காயம்

வெங்காயத்தில் உள்ள 'செலினியம்' வைட்டமின்-இ உற்பத்தியை அதிகரிக்கிறது. இது கண் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும் விறைப்புத்தன்மை பிரச்சனைகளை போக்கவும், பாலியல் வாழ்க்கை மேம்படவும் வெங்காயம் பேருதவியாக உள்ளது.

அதிகாலையில் எழுந்தால் கிடைக்கும் நன்மைகள்- முழு விபரம்..!!

onion

சரும நலன் கூட்டும் வெங்காயம்

மென்மையான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை யார் தான் விரும்பமாட்டார்கள். வெங்காயத்தில் உள்ள வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி மற்றும் வைட்டமின்-கே போன்றவை சரும நலன் காக்கிறது. வெங்காயம் தழும்புகளை நீக்கவும், முகத்தில் உள்ள வெளிப்புற காரணிகளால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கவும், சருமத்தில் மாட்டிக்கொள்ளாமல் இறந்த சரும செல்களை வெளியேற்றவும் பெரிதும் உதவுகிறது.
 

click me!