Jio + Disney Plus Hotstar Merger
ரிலையன்ஸ் ஜியோ வால்ட் டிஸ்னியின் ஹாட்ஸ்டார் இயங்குதளத்துடன் இணைவதற்கான ஒப்பந்தத்தை நிறைவு செய்துள்ளது. புதிய OTT நிறுவனமான ஜியோஸ்டாரை உருவாக்குகிறது.
Jio HotStar
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இப்போது இந்தத் தளத்தில் 46.82% பங்குகளை வைத்திருக்கிறது, டிஸ்னி ஹாட்ஸ்டார் 36.84% மற்றும் மீதமுள்ள 16.34% Viacom18 க்கு சொந்தமானது. இந்த கூட்டு முயற்சியானது இந்தியாவில் வீடியோ ஸ்ட்ரீமிங்கை தளங்களில் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மலிவு விலையில் பிரீமியம் சந்தாவை வழங்குகிறது.
JioStar.com
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Jiostar.com பல்வேறு பார்வையாளர்களுக்கு ஏற்ற சந்தா திட்டங்களைக் கொண்டுள்ளது. ஸ்டாண்டர்ட் டெபினிஷன் (SD) மற்றும் ஹை டெபினிஷன் (HD) வகைகளில் சந்தாக்கள் கிடைக்கின்றன. மாதத்திற்கு வெறும் 15 ரூபாய் முதல் சந்தா செலுத்த முடியும்.
JioStar OTT plans
குழந்தைகளுக்கு டிஸ்னி கிட்ஸ் பேக் ரூ.15, டிஸ்னி ஹங்காமா கிட்ஸ் பேக் ரூ.15 மாதச் சந்தாவில் கிடைக்கிறது. குழந்தைகளுக்கான HD பேக்குகள் மாதம் ₹18 முதல் உள்ளன.
ஸ்டார் வேல்யூ பேக் ரூ. 59, ஸ்டார் பிரீமியம் பேக் ரூ.105 மாதாந்திரச் சந்தாவில் கிடைக்கும். மராத்தி, ஒடியா, பெங்காலி, தெலுங்கு, கன்னடம் மொழிகளில் குறைந்தபட்சம் ரூ.45 முதல் அதிகபட்சம் ரூ.110 வரை சந்தா திட்டங்கள் உள்ளன.
JioStar
JioStar என்ற புதிய நிறுவனத்துக்கு அம்பானியின் மனைவி நீடா அம்பானி தலைவராக செயல்படுவார். உதய் ஷங்கர் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுளார். ஜியோஸ்டார் மலிவு விலையில் உயர்தர OTT சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பல்வேறு இந்திய மொழிகளுக்கு ஏற்றவாறு பிரத்யேகமான பேக்குகளுடன், நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்குத் தேவையான சந்தா ஆப்ஷன்களை வழங்குகிறது.