உலகம் முழுவதும் முடங்கிய இன்ஸ்டாகிராம்! நுழைய முடியாமல் புலம்பும் பயனர்கள்!

First Published | Nov 19, 2024, 12:52 PM IST

இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் முடங்கியுள்ளது. பயனர்கள் செயலியில் உள்நுழைய முடியவில்லை என்று புகார் கூறுகின்றனர். வேறு சில சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.

Instagram Down Globally

இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள இன்ஸ்டாகிராம் (Instagram) பயனர்கள் செயலியை பயன்படுத்துவதில் கடுமையான இடையூறுகளை எதிர்கொள்கிறார்கள். இன்ஸ்டா கணக்கிற்குள் நுழைவதற்கான லாக்-இன் முயற்சிகள் தோல்வி அடைவதாக பல கூறுகின்றனர். சர்வர் இணைப்புச் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் பயனர்கள் சொல்கிறார்கள்.

Downdetector on Instagram

பிரபல சமூக வலைத்தளத்தில் ஏற்பட்டுள்ள இந்த தொழில்நுட்பக் குறைபாடு கோடிக்கணக்கான பயனர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. ஆன்லைன் சேவைகளில் ஏற்படும் இடையூறுகளைக் கண்காணிக்கும் இணையதளமான டவுன்டெக்டர் (Downdetector), இன்ஸ்டாகிராம் சிக்கல்கள் குறித்து 700 க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன என்று கூறுகிறது.

Tap to resize

Instagram down

திங்கட்கிழமை காலை 10:37 மணியளவில் புகார்கள் அதிக அளவில் வந்தன. இது ஒரு வாரத்திற்குள் இன்ஸ்டாகிராம் தளத்தில் ஏற்பட்டுள்ள இரண்டாவது பெரிய தொழில்நுட்பப் பிரச்சினை ஆகும். கடந்த நவம்பர் 13ஆம் தேதியும் இதேபோன்ற முடக்கம் ஏற்பட்டது.

Instagram Down in India

இந்தியாவிலும் கணிசமான அளவுக்கு இன்ஸ்டாகிராம் செயலிழப்பு ஏற்பட்டள்ளது. 42% பயனர்கள் உள்நுழைவு சிக்கல்கள் பற்றிப் புகார் கூறியுள்ளனர். அதே நேரத்தில் 39% பேர் சர்வர் தொடர்பான சிக்கல்களை எதிர்கொண்டனர். 19% பேர் அப்ளிகேஷன் தொடர்பான பிரச்சினை வருவதாக தெரிவித்துள்ளனர் என டவுன்டெக்டர் கூறுகிறது.

Instagram Report

சென்ற நவம்பர் 13ஆம் தேதி இரவு 9:51 மணிக்கு பல பகுதிகளில் இன்ஸ்டாகிராம் முடங்கியது. இந்தியாவில் இருந்து மட்டும் 130 புகார்கள் வந்திருப்பதாக டவுன்டெக்டர் தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினை குறித்து இன்ஸ்டாகிராம் சார்பில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை ஏதும் வெளிவரவில்லை. அடிக்கடி பிரச்சினை ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.

Latest Videos

click me!