Earn on Instagram: இன்ஸ்டாகிராம் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? ஈசியான 5 வழிகள் இதோ!

Published : Jul 29, 2024, 04:02 PM IST

இன்ஸ்டாகிராம் செயலியில் ரீல்ஸ் அம்சம் வந்ததில் இருந்து அது மிகவும் பிரபலமாகிவிட்டது. இப்போது, இன்ஸ்டா பயனர்கள் மத்தியில் அதிக செல்வாக்கு கொண்டவர்கள் நிறைய சம்பாதிக்க முடியும்.

PREV
17
Earn on Instagram: இன்ஸ்டாகிராம் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? ஈசியான 5 வழிகள் இதோ!
Earn in Instagram

இன்ஸ்டாகிராம் ஒரு வெற்றிகரமான பிராண்டை உருவாக்குவதற்கும் வருமானம் ஈட்டுவதற்கும் பயன்படும் சக்திவாய்ந்த கருவியாக மாறியுள்ளது. இன்ஸ்டா பயனர்கள் அதில் உள்ள வருவாய் ஈட்டும் வாய்ப்புகளை எப்படி பயன்படுத்திக்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.

27
Instagram Influencers

இன்ஸ்டாகிராம் செயலியில் ரீல்ஸ் அம்சம் வந்ததில் இருந்து அது மிகவும் பிரபலமாகிவிட்டது. இப்போது, இன்ஸ்டா பயனர்கள் மத்தியில் அதிக செல்வாக்கு கொண்டவர்கள் நிறைய சம்பாதிக்க முடியும்.

37
Instagram Sponsors

ஸ்பான்சர் பதிவுகள்: இன்ஃப்ளூயன்ஸர் மார்க்கெட்டிங் நிபுணர்களின் கூற்றுப்படி, பிராண்ட் பார்ட்னர்ஷிப் மூலம் ஸ்பான்சர் செய்யப்பட்ட பதிவுகளை வெளியிடுவதன் பெரும்பாலான இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் வருமானம் ஈட்டுகிறார்கள்.

47
Instagram Affiliates

அஃபிலியேட் பதிவுகள்: அஃபிலியேட் பார்ட்னர்ஷிப் முறையில் லிங்க், தள்ளுபடி கூப்பன் போன்றவற்றைப் பகிர்வதன் மூலம் இன்ஸ்டா கிரியேட்டர்களுக்கு கமிஷன் தொகை கிடைக்கும். அஃபிலியேட் மார்க்கெட்டிங் நெட்வொர்க்குகள் மூலமாகவோ அல்லது பிராண்டிலிருந்து நேரடியாகவோ, 5-30% வரை கமிஷன் கிடைக்கும்.

57
Instagram Bonus

இன்ஸ்டாகிராம் போனஸ்: இன்ஸ்டாகிராம் தனது போனஸ் திட்டத்தின் மூலம் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் போடும் பதிவுகளுக்கு வெகுமதி கிடைக்கும். இது இன்ஸ்டாகிராமில் இருந்து நேரடியாக பணம் சம்பாதிப்பதற்கான வழியாக உள்ளது. ஆனால், ​​இந்த அம்சம் இன்ஸ்டாகிராம் பிசினஸ் மற்றும் கிரியேட்டர் கணக்குகளுக்கு மட்டுமே கிடைக்கிறது.

67
Instagram User Contents

பிராண்டு விளம்பரம்: பிராண்டுகள் அவற்றை பயன்படுத்தும் பயனர்களை வைத்தே இயல்பான விளம்பரப் பதிவுகளை உருவாக்கி சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிடுகின்றன. அந்த வகையில், பல பிராண்டுகள் கிரியேட்டர்களுக்கும் பணம் கொடுத்து விளம்பரப் பதிவுகளை உருவாக்குகின்றன.

77
Instagram Donations

நன்கொடைகள் மற்றும் பரிசுகள்: இன்ஸ்டாகிராமில் ரசிகர்களிடம் நேரடியாகவே பணம் சம்பாதிக்கலாம். உங்கள் பதிவுகளைத் பின்தொடரும் ஃபாலோயர்களிடம் இருந்து நன்கொடையாக பணத்தைப் பெறலாம். பரிசுகளாகவும் அவை கிடைக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories