இது வாய்ஸ் கால் மாதிரி இல்ல... வாட்ஸ்அப்பில் புதிய Voice chat வசதியை எப்படி பயன்படுத்துவது?

First Published | Nov 16, 2023, 5:37 PM IST

குழு உரையாடல்களுக்காக வாட்ஸ்அப் புதிய வாய்ஸ் சாட் (Voice chat) அம்சத்தை அம்சத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. வாட்ஸ்அப்பில் குரூப் சாட் அம்சம் நீண்ட காலமாக உள்ளது. குரூப் வாய்ஸ் கால் அம்சமும் உள்ளது. இப்போது வந்திருக்கும் புதிய வாய்ஸ் சாட் அம்சம் வித்தியாசமானது.

WhatsApp Voice chat

வாய்ஸ் சாட் தொடங்கும்போது ரிங்டோன் ஒலிக்காது. அதற்குப் பதிலாக, குரூப் உறுப்பினர்களுக்கு புஷ் நோட்டிம்பிகேஷன் மட்டுமே வரும். வாய்ஸ் சாட்டில் இணைந்தவுடன் குரூப்பில் உள்ள அனைவருடனும் நேரடியாகப் பேசத் தொடங்கலாம். பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் குழுவில் மெசேஜ் அனுப்பவும் முடியும்.

WhatsApp Update

வாட்ஸ்அப்பில் இந்தப் புதுமையான வாய்ஸ் சாட் அம்சம் ஒருவிதமான ஆடியோ கால் மாதிரி தான். ஆனால் அதிக எண்ணிக்கையிலான நபர்களுடன் பேசமுடியும். கூடுதல் அம்சங்களுடன் பயனர்கள் நேரடியாக குழு உறுப்பினர்களுடன் பேச முடியும்.

Tap to resize

Voice chat vs Voice call

வாட்ஸ்அப் வாய்ஸ் கால் அம்சம் 32 பேர் வரை ஒரே நேரத்தில் பேச அனுமதிக்கிறது. குருப் உறுப்பினர்கள் எண்ணிக்கை 33 முதல் 128 வரை இருந்தால் மட்டும் வாய்ஸ் சாட் அம்சத்தை பயன்படுத்த முடியும்.

WhatsApp Group Chat

வாட்ஸ்அப்பில் வந்திருக்கும் இந்தப் புதிய வாய்ஸ் சாட் அம்சம் எண்ட்-டூ-எண்ட் என்க்ரிப்ஷன் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு தளங்களிலும் இந்த வாய்ஸ் சாட் அம்சம் பயன்படுத்த முடியும்.

Voice chat feature in WhatsApp

வாய்ஸ் சாட் அழைப்பு வந்தால் பயனர்களுக்கு நோட்டிஃபிகேஷன் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். வழக்கமான வாய்ஸ் கால் போல இல்லாமல் எந்த ரிங்டோனும் ஒலிக்காது.

How to use Voice chat in WhatsApp

வாட்ஸ்அப் வாய்ஸ் சாட் அழைப்பு வந்தவுடன், திரையில் தோன்றும் சாட் பபிள் மூலம் வாய்ஸ் சாட்டில் இணையும் ஆப்ஷன் கொடுக்கப்படும்.

WhatsApp Latest Update

வாட்ஸ்அப் வாய்ஸ் சாட் அம்சத்தில் உரையாடலில் இணைந்துள்ள நபர்களின் விவரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கும். வெவ்வேறு பயன்பாடுகளுக்கான பட்டன்களும் திரையில் இருக்கும்.

Latest Videos

click me!