வாட்ஸ்அப்பில் போட்டோ அனுப்ப இன்னொரு புதிய வசதி! இனி கேம்ப்ஷனையும் எடிட் பண்ணலாம்?

First Published | Aug 21, 2023, 5:05 PM IST

வாட்ஸ்அப் செயலியில் ஹெச்.டி. போட்டோஸ் அனுப்பும் வசதியைத் தொடர்ந்து அனுப்பிய புகைப்படங்களின் கேப்ஷன்களை எடிட் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் புதிய அப்டேட்

மெட்டா (Meta) நிறுவனம் வாட்ஸ்அப்பில் அனுப்பிய செய்திகளைத் திருத்தும் வசதியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இப்போது அந்த அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இனி வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் அனுப்பிய வீடியோ, போட்டோ போன்றி மீடியா கோப்புகளின் கேப்ஷன்களையும் எடிட் ஆப்ஷன் மூலம் திருத்தலாம்.

எடிட் மீடியா அம்சம் என்ன?

வாட்ஸ்அப்பின் புதிய எடிட் மீடியா கேப்ஷன் வசதி அம்சம் அனுப்பிய 15 நிமிடங்களுக்குள் கேப்ஷனில் உள்ள எழுத்துப் பிழைகளை சரிசெய்ய உதவியாக இருக்கும். இந்த அம்சத்தைப் பயன்படுத்த பயனர்கள் தங்கள் மொபைலில் வாட்ஸ்அப் செயலிலை சமீபத்திய வெர்ஷனுக்கு அப்டேட் செய்ய வேண்டும். ஆண்ட்ராய்டு, iOS, டெஸ்க்டாப் பயனர்கள் அனைவரும் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம்.

Tap to resize

வாட்ஸ்அப்பில் கேப்ஷனை எடிட் செய்வது எப்படி?

மீடியா கேப்ஷனை எடிட் செய்ய, கேப்ஷனுடன் அனுப்பிய சமீபத்திய செய்தியைத் தேர்ந்தெடுத்து ஆப்ஷன் மெனுவில் இருந்து கேப்ஷன் எடிட் செய்வதற்கான ஆப்ஷடனைத் செலக்ட் செய்து, தேவையான திருத்தத்தைச் செய்யலாம். புகைப்படங்கள், வீடியோக்கள், GIF, டாக்குமெண்டுகள் போன்ற மீடியா கோப்புகளை கேப்ஷனுடன் அனுப்பினால் மட்டுமே இந்த வசதி இருக்கும். அதுவும் அனுப்பிய 15 நிமிடங்கள் வரை மட்டுமே இந்த கேப்ஷன் எடிட் ஆப்ஷன் இருக்கும் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

வாட்ஸ்அப் ஸ்கிரீன் ஷேர்

ஏறக்குறைய இரண்டு மாதங்கள் நீடித்த ஒரு விரிவான பீட்டா சோதனைக் கட்டத்திற்குப் பிறகு, வாட்ஸ்அப்பில் ஸ்கிரீன் ஷேர் அம்சத்தை அம்சம் அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த வசதி மூலம் பயனர்கள் வீடியோ அழைப்புகளில் இருக்கும்போது தங்கள் தொலைபேசி மற்றும் லேப்டாப் திரையை மற்றவர்ககள் பார்க்கும் வகையில் பகிர்ந்து கொள்ள முடியும்.

Latest Videos

click me!