வாட்ஸ்அப் தொல்லையா மாறிருச்சா! இதை செஞ்சு பாருங்க... ரிலாக்ஸா இருக்கலாம்...

First Published | May 9, 2024, 1:03 PM IST

அதிகமான வாட்ஸ்அப் பயன்பாடு பலருக்கும் தொல்லையாகவும் மாறியிருக்கிறது. அவர்கள் வாட்ஸ்அப்பில் இருந்து லாக்-ஆஃப் செய்யாமல் தற்காலிகமாக வாட்ஸ்அப்பில் இருந்து விலகி இருக்கும் வழிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

Temporarily disappear from WhatsApp

விரைவான தகவல் பரிமாற்றத்துக்காக வாட்ஸ்அப் செயலியை கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், அதே நேரத்தில் அதிகமான வாட்ஸ்அப் பயன்பாடு பலருக்கும் தொல்லையாகவும் மாறியிருக்கிறது. அவர்கள் வாட்ஸ்அப்பில் இருந்து விலகி இருக்க சில எளிய வழிகள் உள்ளன. இதற்காக வாட்ஸ்அப்பில் இருந்து லாக்-ஆஃப் செய்துவிட்டு முழுமையாக விலக வேண்டியது இல்லை.

Disappear from WhatsApp

நண்பர்கள் எந்த நேரத்திலும் உங்களுக்கு செய்திகளை அனுப்பலாம். ஆனால், அந்த நேரத்தில் உரையாடலுக்கான மனநிலையில் இல்லை என்றால், அது விரும்பத்தகாத குறுக்கீடாக இருக்கும். அதுபோன்ற குறுக்கீடுகளைத் தவிர்த்து வாட்ஸ்அப் மெசேஜ்களால் கவனச்சிதறல் ஏற்படாமல் ரிலாக்ஸாக இருக்கலாம்.

Latest Videos


Block notifications for WhatsApp

வாட்ஸ்அப்பில் நோட்டிஃபிகேஷனை ஆஃப் செய்து வைக்கலாம். மொபைல் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று அதில் வாட்ஸ்அப் செயலியில் இருந்து வரும் நோட்டிஃபிகேஷன்களை மட்டும் முழுமையாக பிளாக் செய்து வைக்கலாம்.

Turn off all notification sounds

வாட்ஸ்அப் செயலிக்கு உள்ளேயே ஒரு ஆப்ஷன் இருக்கிறது. வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதியில் அனைத்து விதமான நோட்டிஃபிகேஷன்களின் சத்தத்தையும் ஆஃப் செய்யலாம்.

Force stop WhatsApp

ஃபோர்ஸ் ஸ்டாப் (Force stop) ஆப்ஷனை பயன்படுத்தி வாட்ஸ்அப் செயலியின் செயல்பாட்டை நிறுத்தி வைக்கலாம். மொபைல் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று அதில் வாட்ஸ்அப் செயலியை தேர்வு செய்து, ஃபோர்ஸ் ஸ்டாப் ஆப்ஷனை பயன்படுத்தலாம்.

Turn off Data Usage

வாட்ஸ்அப் செயலிக்கு மட்டும் இன்டர்நெட் பயன்பாட்டைத் தடை செய்யலாம். மொபைல் செட்டிங்ஸில் டேட்டா யூசேஜ் (Data Usage) பகுதியில் வாட்ஸ்அப் செயலியை தேர்வு செய்து அதில் மொபைல் டேட்டா பயன்பாட்டை ஆஃப் செய்யலாம்.

Turn off internet connectivity

மொபைலில் இன்டர்நெட் வசதியை தற்காலிகமாக தற்காலிகமாக துண்டித்து வைக்கலாம். மொபைல் டேட்டா அல்லது வை-ஃபை இணைப்பை ஆஃப் செய்யலாம். இதன் மூலம் வாட்ஸ்அப் மட்டுமின்றி வேறு எந்த அப்ளிகேஷனிலும் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியாமல் போகும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

Turn on Flight mode

Flight mode ஐ கூட பயன்படுத்தலாம். ஆனால் இதனால் முழுமையாக மொபைல் தொடர்பே இல்லாமல் போகும். போன் கால், எஸ்எம்எஸ், ஈமெயில் போன்ற தொடர்புகளுக்கும் வாய்ப்பில்லாமல் இருக்கும்.

click me!