ஆம்பூர் பிரியாணி :
ஆம்பூர் பிரியாணி என்றால் மென்மையான சுவை, குறைந்த மசாலா, சூப்பரான மணம் என்று ஒவ்வொருவருக்கும் நினைவில் வரும். தமிழகத்தில் வெற்றிகரமான பிரியாணி வகைகளில் முதன்மையானது ஆம்பூர் ஸ்டைல் பிரியாணி தான். இது ஹைதராபாத், தலப்பாக்கட்டி பிரியாணியை விட குறைவாக மசாலா இருந்தாலும், சிறப்பு சுவை கொண்டது. வீட்டிலேயே முல்தானி மசாலா, சீரக சம்பா அரிசி கொண்டு ஆம்பூர் கடைகளில் கிடைக்கும் உண்மையான பிரியாணி சுவை பெறலாம்.
ஆம்பூர் பிரியாணி சிறப்பு என்ன?
- சீரக சம்பா அரிசி , இதுவே உண்மையான பிரியாணிக்கு ரகசியம்!
- குறைந்த மசாலா, அதிக சுவை கொண்டது. அதிக காரம் மற்றும் கொழுப்பு இல்லாமல் உண்மையான பிரியாணி மணம்!
- நல்லெண்ணெயில் தயார் செய்த உணவு என்பதால் அதிக எண்ணெய் சேர்க்க தேவையில்லை.
- சுவையான முட்டை, கேரட் ரைதா, மட்டன் சால்னா சேர்த்து சாப்பிட சூப்பர்!
- வெகு நேரம் சமைக்க தேவையில்லை . 45 நிமிடங்களில் ரெடி!
தேவையான பொருட்கள் :
மட்டன்/சிக்கன் – 500 கிராம்
சீரக சம்பா அரிசி – 2 கப்
நல்லெண்ணெய் / நெய் – 3 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 4
புதினா மற்றும் கொத்தமல்லி – 1 கைப்பிடி
தயிர் – 1/2 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மேலும் படிக்க:குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கர்நாடகா ஸ்டைல் மாங்காய் சாதம்
மசாலா பொருட்கள்:
மிளகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
லவங்கம் – 4
பிரிஞ்சி இலை – 2
ஏலக்காய் – 2
பட்டை – 1 துண்டு
சோம்பு – 1/2 டீஸ்பூன்
அம்பூர் பிரியாணி செய்முறை :
- மட்டனை சுத்தம் செய்து தயிர், மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இதனால் மட்டன் மென்மையாகும் மற்றும் சுவை ஊறும்.
- ஒரு பெரிய பானையில் நல்லெண்ணெய் சூடாக்கி, அதில் மசாலா பொருட்கள் (லவங்கம், ஏலக்காய், பட்டை, பிரிஞ்சி இலை, மிளகு, சீரகம், சோம்பு) சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பழுப்பு நிறமாகும் வரை வதக்கவும்.
- தக்காளி சேர்த்து 2-3 நிமிடங்கள் நன்கு மொத்தாகும் வரை கிளறவும்.
- ஊற வைத்த மட்டனை இப்போது சேர்த்து 5-7 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்.
- 1/2 கப் தண்ணீர் சேர்த்து, சிறிய தீயில் 15-20 நிமிடங்கள் மட்டன் நன்கு வேக விடவும்.
- பிறகு, புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து கிளறவும்.
- அரிசியை நன்கு கழுவி, 4 கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- குழம்பு மற்றும் அரிசி நன்கு கலந்ததும், தாழ்த்தி 15 நிமிடங்கள் தம்மில் வைத்து வேகவிடவும்.
- 15 நிமிடங்களுக்கு பிறகு, நெய் ஊற்றி அலட்டாமல் கிளறவும்.
பரிமாறும் முறைகள் :
- கேரட் மற்றும் வெங்காய ரைதா ஆம்பூர் பிரியாணிக்கு பரிமாற சிறந்த கூட்டணி.
- கலக்கும் மட்டன் சால்னா பிரியாணியுடன் சூப்பராக இருக்கும்.
- முட்டை வறுவல் அல்லது சிக்கன் 65 சுவையை இன்னும் அதிகரிக்கும்.
- தயிர் மற்றும் எலுமிச்சை சேர்த்து சாப்பிடலாம் லேசான செரிமானத்திற்கு நல்லது.
மேலும் படிக்க:இலை அடை முதல் காதல் பிரியாணி வரை: கேரளாவின் 10 அசத்தலான பலாப்பழ உணவுகள்
சிறப்பு குறிப்புகள் :
- சீரக சம்பா அரிசி தவிர, பாஸ்மதி பயன்படுத்த வேண்டாம் . ஆம்பூர் பிரியாணி தனித்துவம் இருக்காது.
- மசாலா குறைவாக இருப்பதால் மட்டன் நன்கு வேக வேண்டும், சுவை ஊறி வர.
- தக்காளி சரியாக மசிய வேண்டும் . பிரியாணிக்கு நல்ல கலரிங் வரும்.
- சிறிது சிறிதாக தண்ணீர் சேர்க்கவும்.அதிகமான தண்ணீர் சேர்த்தால் அரிசி குழைந்து விடும்.
- அகலமான பாத்திரம் பயன்படுத்தவும், பிரியாணி ஒவ்வொரு முறையும் தனித்துவமான தன்மை பெற.