ஹீரோயின் போல பளபளப்பான சருமம் வேண்டுமா? இதுதான் சீக்ரெட்..

First Published | Aug 16, 2024, 5:22 PM IST

சரும ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் 5 சிவப்பு பழங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. இந்த பழங்கள் சருமத்திற்கு ஊட்டமளித்து, ஈரப்பதமூட்டி, இளமை தோற்றத்தைத் தக்கவைக்க உதவுகின்றன. மேலும், இந்த பழங்களில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தைப் பாதுகாத்து, பொலிவூட்டுகின்றன.

fruits

நமது சரும ஆரோக்கியத்தில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை சருமத்திற்கு ஊட்டமளித்து இயற்கையாகவே ஈரப்பதம் கொடுப்பதால் சருமத்திற்கு பொலிவு கிடைக்கீறது. தினமும் பழங்களை சாப்பிடுவதால் செல்கள் சேதமடைவதை தடுப்பது மட்டுமின்றி, சருமம் முதிர்வடைவதையும் தடுக்கிறது. மாதுளை மற்றும் பெர்ரி போன்ற சிவப்பு பழங்கள் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பையும் பொலிவையும் தருகின்றன. இந்த பழங்களை உங்கள் உணவில் சேர்ப்பது சரும ஆரோக்கியத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இந்த 5 சிவப்பு பழங்களில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை உங்கள் பசியை கட்டுப்படுத்துவதால் ஆரோக்கியமான உடல் எடையை  பராமரிக்க முடியும். மேலும் இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் சருமத்திற்கு இயற்கையான பொலிவு கிடைக்கும்.

Pomegranate

மாதுளை

மாதுளையில் ஃபோலேட், வைட்டமின் சி மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது சருமத்திற்கு பளபளப்பான தோற்றத்தையும் அளிக்கிறது. மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல்களுடன் போராடி, செல் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. இது சருமத்திற்கு இயற்கையான பளபளப்பு மற்றும் பிரகாசத்தை அளிக்கிறது.

தலைமுடி வளர சூப்பர் டிப்ஸ்!!

Latest Videos


Strawberry

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியில் ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சருமத்திற்கு உகந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஸ்ட்ராபெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன, அவை முகப்பருவைத் தடுக்கவும் உதவுகின்றன. இது வைட்டமின் சி இன் இயற்கையான மூலமாகும், இது கொலாஜன் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் முன்கூட்டிய வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கிறது. ஸ்ட்ராபெர்ரிகள் மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான பழங்கள். 

Cranberry

கிரான்பெர்ரி

கிரான்பெர்ரி என்று அழைக்கப்படும் குருதி நெல்லியில் வைட்டமின் சி, ஈ கே1, மாங்கனீஸ் மற்றும் தாமிரம் ஆகியவை உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் ஆரோக்கியமான செல் வளர்ச்சியை அதிகரிப்பதன் மூலம் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. குருதிநெல்லிகள் சருமத்திற்கு மென்மையான அமைப்பைக் கொடுக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்பை சரிசெய்கிறது. இது தோல் நெகிழ்ச்சித்தன்மையை இறுக்குவதன் மூலம் வயதானதைத் தடுக்கிறது.

41 வயதிலும் யங் லுக்கில் ஜொலிக்கும் நடிகை த்ரிஷாவின் பியூட்டி சீக்ரெட் என்ன தெரியுமா?

Raspberry

ராஸ்பெர்ரி

ஊட்டச்சத்து நிறைந்த ராஸ்பெர்ரிகளில் வைட்டமின் சி, ஏ மற்றும் ஈ ஆகியவை உள்ளன. ராஸ்பெர்ரி ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும். மேலும் தோலில் சுருக்கங்களைத் தடுக்கும் என்று நம்பப்படுகிறது. இது கண்களைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்களையும் போக்கும். இதில் உள்ள வைட்டமின் ஈ, ஹைப்பர் பிக்மென்டேஷனை நீக்கி சிகிச்சை அளிக்க உதவுகிறது. வறண்ட சரும பிரச்சனைகள் உள்ளவர்கள் ராஸ்பெர்ரிகளை உட்கொள்ள வேண்டும், ஏனெனில் அவை சருமத்திற்கு ஊட்டமளித்து ஈரப்பதமாக்கும்.

Apple

ஆப்பிள்

ஆப்பிள்கள் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கொண்ட நார்ச்சத்து நிறைந்த பழங்கள். அவை வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளன. இவை செரிமானத்தை ஊக்குவிப்பதுடன் ரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகின்றன. தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிடுவது உங்கள் சருமத்தை பொலிவாக்குவதுடன் சருமத்தின் வயதை மாற்றும். அவை ஆரோக்கியமான தோல் செல்-வளர்ச்சியை பராமரிக்கின்றன, தோல் சேதத்தை சரி செய்கின்றன. ஆப்பிள்கள் சருமத்தை நீரேற்றமாகவும், ஊட்டமாகவும் வைத்திருக்கும்.

click me!