
தென்னிந்திய திரை உலகில், முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை த்ரிஷா தன்னுடைய 41 வயதிலும் இளமை பொங்கும் அழகில் ரசிகர்களை வசீகரித்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக கதாநாயகி என்கிற இடத்தை தக்க வைத்து கொண்டுள்ள இவருடைய அழகின் காரணம் அவருடைய டயட் என்று கூறப்படுகிறது. அதிகம் கலோரி நிறைந்த உணவுகளை தவிர்க்கும் த்ரிஷா, ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
த்ரிஷா தன்னுடைய உணவில் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறாரோ, அதை போல் தன்னுடைய ஒர்க் அவுட்டிலும் கவனமாக இருப்பவர். சிறுவயதில் இருந்தே அசைவ உணவுகளை தவிர்க்கும் இவர் தினமும் அதிக காய்கறிகளை உணவில் சேர்த்து எடுத்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். இது அவருடைய எடையை பராமரிக்க உதவியாக உள்ளது.
அதே போல் ஆரோக்கியமான சிற்றுண்டிகளை நடிகை த்ரிஷா எடுத்துக் கொள்கிறார். குறிப்பாக தினமும் டிரை ஃப்ரூட்ஸ், நட்ஸ், பழங்களால் செய்யப்பட்ட சாலட், காய்கறிகளால் செய்யப்பட்ட சாலட், அவித்த கடலை, பருப்பு போன்றவற்றை சாப்பிட விரும்புவாராம்.
பல கோடிக்கு அதிபதியாக இருந்தாலும், 5 ஸ்டார் 7 ஸ்டார் போன்ற ஹோட்டல் உணவுகளை கூட இக்கட்டான சூழலிலும், வெளியிடங்களுக்கு செல்லும் போது மட்டுமே சாப்பிடுவாராம். மற்றபடி சென்னையில் ஷூட்டிங் நடைபெற்றால் வீட்டில் தன்னுடைய அம்மா கைகளால் சமைக்கப்படும் உணவையே சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். குறிப்பாக எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருப்பாராம் த்ரிஷா.
நடிகை த்ரிஷா டயட் மூலமாகவும் உணவு மூலமாகவும் தன்னுடைய உடலை ஆரோக்கியமாக வைத்து கொண்டாலும், மனதை ஆரோக்கியமாக வைத்து கொள்ள, யோகா,மெடிட்டேஷன் போன்றவற்றை செய்கிறார். இது அவரை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. சூட்டிங் ஸ்பாட்டில் இருந்தால் கூட, தினமும் யோகா செய்வதையும் மெடிடேஷன் செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
அதே போல் நடிகை திரிஷாவுக்கு, ஒரு நாள் கூட ஜிம்மில் வொர்க் அவுட் செய்யாவிட்டால் அவருடைய நாளே கடந்த செல்லாதாம். அதிகாலையில் படப்பிடிப்பு இருந்தால் கூட, இரவு நேரத்தில் ஜிம்மில் பயிற்சியை மேற்கொள்கிறார். இதற்காக தன்னுடைய வீட்டிலேயே மிகப்பெரிய ஜிம் செட்டப் ஒன்றையும், ஃபிட்னஸ் ட்ரைனர் ஒருவரையும் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது வீடா.. இல்ல மாடர்ன் அரண்மனையா! மதுரையில் மாஸாக நடிகர் சசிகுமார் கட்டியுள்ள பிரம்மாண்ட வீடு
த்ரிஷா தன்னுடைய பொலிவான அழகை பராமரிக்க விட்டமின் சி நிறைந்த பழங்களை ஜூஸாகவோ அல்லது பழங்களாகவோ எடுத்து கொள்கிறார். இது அவரின் சருமத்திற்கு புத்துணர்ச்சியை கூடுகிறது.
எப்போதுமே த்ரிஷா சாப்பாடு விஷயத்தில் கூடுதல் கவனத்தோடு இருப்பவர். காலை, மதியம், இரவு, என மூன்று வேலையும் சரியான நேரத்திற்கு உணவை எடுத்து கொள்வாராம். அதிலும் காலை உணவு மிகவும் ஊட்டச்சத்து மிகுந்ததாக இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார். ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, மாதுளம் பழம் போன்றவை இடம்பெறுகின்றன.