அதே ரோடு.. அதே வாக்.. ரெஜினாவின் மாஸ் போஸ்டரை வெளியிட்ட விடாமுயற்சி படக்குழு - தல & த்ரிஷாவும் இருகாங்க!
Vidaamuyarchi : கடந்த சில நாட்களாகவே தல அஜித்தின் "விடாமுயற்சி" திரைப்படத்தில் இருந்து தொடர்ச்சியாக பல அப்டேட்கள் வெளியாகி வருகின்றது.
Thunivu
துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, தல அஜித் நடிக்க ஒப்பந்தமான திரைப்படம் தான் "விடாமுயற்சி". கடந்த ஓராண்டு காலத்திற்கும் மேலாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்து வருகிறது. முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த இந்த திரைப்படத்தை தற்பொழுது மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.
azerbaijan
"அஜர்பாஜன்" நாட்டில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், தொடர்ச்சியாக ஹைதராபாத்தில் இப்பொழுது இந்த திரைப்பட பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த திரைப்பட பணிகளோடு இணைந்து தனது குட் பேட் அக்லி திரைப்பட பணிகளையும் அஜித் மேற்கொண்டு வருகின்றார்.
good bad ugly
காலையில் ஏழு மணி அளவில் படப்பிடிப்புக்கு செல்லும் தல அஜித், இரவு ஒன்றரை மணிமவரை ஷூட்டிங்கில் கலந்து கொள்வதாகவும், ஒரு நாளுக்கு 5 மணி நேரங்கள் மட்டுமே அவர் உறங்கச் செல்வதாகவும் அண்மையில் சில தகவல்கள் வெளியானது. இந்த சூழ்நிலையில் விடாமுயற்சி திரைப்படத்திலிருந்து அடுத்த அப்டேட் வெளியாகி உள்ளது.
Regina
இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், நடிகை த்ரிஷா, ஆரவ் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்து வரும் நிலையில், இப்பொது நடிகை ரெஜினா கசாண்ட்ராவின் First Look போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகின்றது.