Foot Care tips: கால் பாதங்களில் வெடிப்பா? ஃபீல் பண்ணாதீங்க.. பித்த வெடிப்பு போக சிம்பிள் வீட்டு டிப்ஸ்!!

First Published Jul 16, 2024, 11:37 AM IST

Foot Care tips: இறைவனின் பாதங்களை தாமரையோடு ஒப்பிடுவார்கள். கோவிலுக்கு போனால் முதலில் சாமியின் பாதங்களில் சரணடையவேண்டும் பிறகுதான் முகத்தை பார்த்து வணங்கவேண்டும் என்று சொல்வார்கள். என்னதான் அழகாக முகத்திற்கு மேக் அப் போட்டாலும் நமது பாதங்களில் பிரச்சினையோ, பாதிப்போ இருந்தால் அந்த வலி முகத்தில் தெரியும் எனவே நமது பாதங்களை வீட்டிலேயே மென்மையாக அழகாக மாற்ற சில எளிமையாக வீட்டு குறிப்புகள் உள்ளன.

பாதங்களின் ஆரோக்கியம்:

நம்மை தினந்தோறும் சுமந்து கொண்டு இருக்கும் பாதங்களை நாம் கவனிக்க மறந்து விடுகிறோம். இதனால் கால்களில் வறட்சி, பித்த வெடிப்பு போன்றவை ஏற்படும். ரத்த ஓட்டம் கால்களில் சீராக இருந்தாலே பாதங்கள் ஆரோக்கியமாக இருக்கும். தெருவில் இருக்கும்
கிருமிகள் முதலில் நம் கால் பாதங்கள் வழியாக தான் நம் உடலுக்குள் செல்கிறது. அதனால் எங்கு சென்றாலும் காலணிகளை அணிய மறக்க கூடாது.

பித்த வெடிப்பு குணமாக:

கால்கள் அழகாக இருக்க வேண்டும் என்றால் பாதங்களில் பித்த வெடிப்பு வராமல் பார்த்துக் கொள்வது அவசியம்.  வெடிப்பு இருந்தால் கால்கள் வறட்சியாக இருக்கும். நம் உடல் சூட்டின் காரணமாக தான் கால் வெடிப்பு உருவாகிறது. எனவே நம் உடலை குளிர்ச்சியாக பார்த்து கொள்ள வேண்டும்.

Latest Videos


இளம் சூடான தண்ணீர்:

கால் பாதங்கள் ஈரப்பதத்தோடு இருப்பது தான் அழகு. எனவே, முதலில் நீண்ட நேரம் கால்களை தண்ணீரில் ஊறவிடுவதை தவிர்க்க வேண்டும். தண்ணீரில் நீண்ட நேரம் நிற்கும் போது பாதங்களின் உள்ள இயற்கையான எண்ணெய் மறைந்து தோல் வறண்டு போய்விடும். சூடான நீரில் குளிப்பது கால் அழகிற்கு நல்லது கிடையாது. எனவே வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்.

மருதாணி:

நம்முடைய முன்னோர்கள் கால்கள், கைகளில் மருதாணி போடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். இது அழகுக்காக மட்டுமல்ல கால்கள், கைகளில் உள்ள நகங்களின் ஆரோக்கியத்திற்காக என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பாத வெடிப்பு குணமாக மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக அரைத்து கால் வெடிப்பின் மீது போட்டு வர கால்களில் இருந்த பாத வெடிப்பு சரியாகும் பாதங்களும் அழகாகும். மருதாணி வைப்பது பாதங்களுக்கு அழகாக இருப்பதோடு மன அழுத்த பிரச்சினையையும் சரி செய்யும்.

கற்றாழை:

உடல் சூட்டின் காரணமாக ஏற்படக்கூடிய இந்த பாத வெடிப்பின்மீது கற்றாழையின் சதைப் பகுதியை எடுத்து ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால் சில நாட்களில் பாத வெடிப்பு குணமாகும். மேலும் உருளைக்கிழங்கு சாறு எடுத்து பாதங்களில் பூசி வந்தால் வெடிப்பு மறைவதோடு குதி கால்கள் அழகாக காட்சி அளிக்கும்.

எலுமிச்சை:

ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகள் கால்களில் தங்காது. தயிரை பாதங்களில் தடவி, மென்மையான பிரஸ் கொண்டு வெடிப்புகளில் தேய்க்க வேண்டும். மறுநாள் கல் உப்பு அல்லது சோடா உப்பை குதிகால்களில் தேய்த்து, கழுவ வேண்டும். வாரம் மூன்று முறை இப்படி செய்தால் பாதம் மெத்தென்று ஆகும்.
 

வீட்டில் பெடிக்கியூர்:

வேலைக்கு போய் விட்டு வருபவர்கள் தினசரி இரவு கால்களை வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பை சேர்த்து,5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதனால் பாதங்களில் இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கிவிடும். பிறகு மென்மையான பிரஸ் வைத்து பாதங்களை தேய்க்க வேண்டும். இதனால் பாதங்களின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளும் முற்றிலும் நீங்கிவிடும். பாதங்களை சுத்தம் செய்த பின்னர், எலுமிச்சையை வைத்து, பாதங்களில் ஒரு முறை நன்கு தேய்த்துவிட வேண்டும். முக்கியமாக நகங்களில் தேய்க்க வேண்டும். இதனால் நகங்கள் நன்கு வெண்மையோடு காணப்படுவதோடு, கால்களும் சுத்தமாக இருக்கும். இரவு நன்றாக உறக்கம் வரும்.

தேங்காய் எண்ணெய் மசாஜ்:

வாரம் ஒருமுறை கால்களை சுத்தம் செய்து பாதங்களுக்கு மாய்ச்சுரைசர் கிரீமை தடவ வேண்டும்.  ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய் அல்லது ஏதேனும் ஒரு பாடிலோசனை தடவலாம். இதனால் கால்கள் நன்கு ஈரப்பதத்துடன் பார்க்க அழகாக இருக்கும். இரவு உறங்கும் முன்பாக தேங்காய் எண்ணெய் கொண்டு பாதங்களை மசாஜ் செய்து விட்டு உறங்கலாம். தூக்கம் நன்றாக வருவதோடு பாதங்களும் மென்மையாக அழகாக மாறும்.

click me!