மூக்கில் இருக்கும் கரும் புள்ளிகள் அழகை கெடுக்குதா..? ஈஸியாக போக்க சிம்பிள் டிப்ஸ்.!!

First Published Feb 5, 2024, 6:43 PM IST

மூக்கில் உள்ள கரும்புள்ளிகள் உங்கள் முகத்தின் அழகாய் கெடுக்கும். எனவே, இவற்றை நீக்க உதவும் சில உதவி குறிப்புகள் இங்கே..

மூக்கில் உள்ள கரும்புள்ளிகள் முகத்தின் அழகைக் கெடுக்கும். உண்மையில், இந்த கரும்புள்ளிகளை மூக்கில் இருந்து அகற்றுவது எளிதல்ல. பல நேரங்களில் மக்கள் நகங்களால் கரும்புள்ளிகளை அகற்றுகிறார்கள். ஆனால், இது உங்கள் சருமத்தை மோசமாக்கும். மூக்கில் உள்ள கரும்புள்ளிகளை போக்க, இந்த எளிய வீட்டு குறிப்புகளை பின்பற்றுங்கள்.
 

வாழைப்பழத்தோல் : இது கரும்புள்ளிகளை குறைக்கும் எளிய வீட்டு வைத்தியமாகும். வாழைப்பழத்தை உண்ணும் போதெல்லாம், அதன் தோலை தூக்கி எறிவதற்கு பதிலாக, அதை கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தேய்க்கவும். இப்படி செய்தால்,  கரும்புள்ளிகள் குறையும். 
 

மஞ்சள் : மஞ்சள் சருமத்துக்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் அதிகம் உள்ளது. மூக்கில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க மஞ்சளில் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து தடவி, 10-15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தவும். 

இதையும் படிங்க:  ஒரே வாரத்தில் உங்கள் முகம் தங்கம் போல ஜொலி ஜொலிக்க பெஸ்ட் மாய்ஸ்சரைசர்... எப்படி செய்வது..??

தேன் : கரும்புள்ளிகளை அகற்ற தேன் பெரிதும் உதவுகிறது. கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் தேனை தடவி மசாஜ் செய்யவும். இப்படி அரை மணி நேரம் வைத்திருந்து பின் கழுவவும். மேலும் இது அதிகப்படியான கருப்பு நிறமியை உற்பத்தி செய்வதைத் தடுக்கிறது.

இதையும் படிங்க:  தினமும் இரவு தூங்கும் முன் 'இத' முகத்தில் தடவுங்க... இனி முக சுருக்க பிரச்சினை வராது!

முல்தானி மெட்டி : மூக்கில் உள்ள கரும்புள்ளிகளை அகற்ற முல்தானி மெட்டி பெரிதும் உதவுகிறது. முல்தானி மெட்டியை கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி சிறிது நேரம் அப்படியே வைக்க வேண்டும். பின்னர் மசாஜ் செய்து கழுவவும். இதை தினமும் செய்யலாம். இது உங்களுக்கு நல்ல பலனைத் தரும். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

முட்டை : கரும்புள்ளிகளை அகற்ற முட்டை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அதில் 1 டீஸ்பூன் தேன் கலக்கவும். கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறையாவது பயன்படுத்த வேண்டும். 

அரிசி மாவு : அரிசி மாவு மூக்கில் உள்ள கரும்புள்ளிகளைப் போக்க உதவுகிறது. அரிசி மாவில் கற்றாழை ஜெல்லை கலந்து பேஸ்ட் செய்யவும். பின்னர் இந்த பேஸ்ட்டை மூக்கில் தடவவும். நன்கு காய்ந்த பிறகு, தண்ணீரில் முகத்தை கழுவவும். பிறகு  வித்தியாசத்தை நீங்கள் பார்பீர்கள்.

click me!