திடீரென விலகிய மகாநதி சீரியல் நடிகை லட்சுமி பிரியா... அவருக்கு பதில் நடிக்கப்போவது சன் டிவி சீரியல் நடிகையா?

First Published Feb 28, 2024, 1:15 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் நடித்து வரும் லட்சுமி பிரியா, திடீரென விலகி உள்ளதால் அவருக்கு பதில் சன் டிவி சீரியல் நடிகை நடிக்க உள்ளாராம்.

Lakshmi Priya

மாடல் அழகியான லட்சுமி பிரியா, சினிமாவில் ஹீரோயினாக நடிக்க ஆர்வம் காட்டி வந்தார். அவர் எதிர்பார்த்தபடியே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி அவர் யோகிபாபுவின் பன்னிக்குட்டி படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து அவர் நடித்த ரோட், சிம்புவின் பத்து தல மற்றும் சுனைனா உடன் ட்ரிப் ஆகிய படங்களும் சொதப்பியதால் சீரியல் பக்கம் ஒதுங்கினார்.

serial Actress Lakshmi Priya

நடிகை லட்சுமி பிரியா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் நடித்து வருகிறார். இதுதவிர மலையாளத்தில் சந்திரகாந்தம் என்கிற தொடரிலும் நடித்து வந்தார். அந்த தொடரில் நந்தா என்கிற கேரக்டரில் நடித்து வந்த லட்சுமி பிரியா தற்போது அதில் இருந்து திடீரென விலகி உள்ளார். அவர் விலகியதற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதையும் படியுங்கள்... போலீஸ் யூனிபார்மில் சிங்கம் போல் வந்திறங்கிய ரஜினி... லீக்கான வேட்டையன் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ

Mahanadhi serial Lakshmi Priya

லட்சுமி பிரியா விலகியதும் அந்த சீரியலில் அவருக்கு பதிலாக மான்சி என்பவர் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இவர் வேறு யாருமில்லை, சன் டிவியில் ஷபானா நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். அவர் தான் தற்போது சந்திரகாந்தம் என்கிற மலையாள தொடரில் நந்தா என்கிற கேரக்டரில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.

Lakshmi Priya quit chandrakantham serial

மிஸ்டர் மனைவி சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படும் நிலையில், அதில் வில்லியாக மிரட்டிய மானசி தற்போது மலையாள தொடரில் நடிக்கும் வாய்ப்பை தட்டிதூக்கி இருக்கிறார். மறுபுறம் சந்திரகாந்தம் சீரியலில் இருந்து விலகிய லட்சுமி பிரியா, இனி தொடர்ந்து மகாநதி சீரியலில் மட்டும் நடிக்க முடிவெடுத்து உள்ளாராம்.

இதையும் படியுங்கள்... விஜய் டிவி TRP-க்கு ஆப்பு! வெங்கடேஷ் பட் - தாமு வைத்து ஸ்கெட்ச் சன் டிவி! புது நிகழ்ச்சி குறித்து கசிந்த தகவல்

click me!