ஃபோர்ப்ஸின் டாப் 30 பட்டியலில் இடம்பிடித்த ராஷ்மிகா... அதற்கு அவரது ரகசிய காதலனின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

First Published Feb 16, 2024, 10:47 AM IST

போர்ப்ஸ் இந்தியா இதழ் வெளியிட்ட 30 வயதுக்குட்பட்ட டாப் 30 பிரபலங்களின் பட்டியலில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் இடம்பிடித்து உள்ளார்.

Rashmika Mandanna

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பிரபலங்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இந்தியா நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிடும். அந்த வகையில் தற்போது 30 வயதுக்குட்பட்ட 30 பிரபலங்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் இந்திய திரையுலகை சேர்ந்த மூன்று இளம் நடிகைகள் இடம்பெற்று உள்ளனர்.

Forbes 30 under 30

அதன்படி பொழுதுபோக்கு பிரிவில் 27 வயதாகும் நடிகை ராஷ்மிகா மந்தனா, 28 வயதாகும் நடிகை ராதிகா மதன், 25 வயதாகும் அதிதி சைகல் என்கிற பாடகி ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பிடித்து உள்ளனர். இளம் வயதிலேயே போர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்துள்ள இவர்கள் மூவருக்கும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... தியேட்டரில் ரஜினியின் லால் சலாமுக்கே தண்ணிகாட்டி வரும் லவ்வர்; அதற்குள் ஓடிடிக்கு வருகிறதா? எப்போ ரிலீஸ்?

Vijay Deverakonda wishes Rashmika Mandanna

அதிலும் குறிப்பாக நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ரகசிய காதலனாக கருதப்படும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் இதுகுறித்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதன்படி ராஷ்மிகா போர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்து உள்ளது தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாக அவர் பதிவிட்டு உள்ளார். அவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

Radhika madan

போர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்துள்ள நடிகை ராதிகா மதன் தற்போது இந்தியில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி உள்ள சர்பிரா படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இது தமிழில் சூர்யா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக் ஆகும். இப்படத்தில் அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார் ராதிகா மதன்.

இதையும் படியுங்கள்... சம்பளத்தில் டபுள் செஞ்சுரி அடித்த தளபதி! கடைசி படத்துக்காக விஜய்க்கு வாரி வழங்கப்பட உள்ள சம்பளம் இத்தனை கோடியா

click me!