Department of School Education : அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணப்பலன் பெறுவதற்கு அமைச்சுப் பணிகளை ஆசிரியர்களை மேற்கொள்ள வற்புறுத்துவதாக புகார் வந்ததை அடுத்து அது தொடர்பாக ஒரு அறிக்கையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர் அப்பள்ளியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் கோரிக்கைகளை முறையாக பரிசீலனை செய்து விதிகளுக்கு உட்படும் தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை நூலின்படியும் காலதாமதம் இன்றி அலுவலக தலைவரான தலைமை ஆசிரியருக்கு கோப்புகளை சமர்ப்பிக்க உரிய அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும்.
மேலும் அவர்கள் தபால்களை அலுவலக தலைவரான தலைமை ஆசிரியர் மூலமாக பெறப்பட்டுடன் அவற்றின் முறையாக தன்பதிவேட்டில் பதிவு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் தனி பதிவேடு, முன்கோர் தனிப்பதிவேடு, படிவம் ஏழு, ஆய்வு குறிப்பு ஆகியவற்றை பிரதி மாதம் 5ம் தேதிக்குள் அலுவலக தலைவரான தலைமை ஆசிரியரிடம் முன்னிலைப்படுத்த வேண்டும்.
கோவையில் மழை வேண்டி கழுதைக்கும், கழுதைக்கும் திருமணம்; விருந்தினர்களுக்கு கம்பு கூழ் விருந்து
மேலும் அவர்கள் பராமரிக்கும் ஆய்வு குறிப்பில் அலுவலக தலைவரான தலைமை ஆசிரியரின் ஆய்வு குறிப்புகளையும், படிவம் ஏழு ஆகியவற்றையும் பிப்ரவரி, மே, ஆகஸ்ட், நவம்பர் மாதங்களில்15ஆம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இவ்வாய்வின் போது அப்பள்ளியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் கோரிக்கைகளை உரிய காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை மாவட்ட கல்வி அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் பார்வையில் காணும் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு விண்ணப்பம் நடவடிக்கை இன்றி கிடப்பில் போடப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட பள்ளியின் இடைநிலை உதவியாளர் அல்லது உதவியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட வேண்டும்.
பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர்களுக்கு பள்ளியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் மற்றும் ஆசிரியர் இல்லாத பணியாளர்களின் பணிவரன், தேர்வு நிலை சிறப்பு நிலை, ஓய்வூதியம் போன்ற கருத்துக்களை தயார் செய்வது குறித்து அரைநாள் புத்தாக்க பயிற்சி மாவட்ட கல்வி அலுவலர் நடத்தப்பட்டு, பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களின் பணி திறனை மேம்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் இளநிலை உதவியாளர் அல்லது உதவியால் பணியிடம் காலியாக இருந்தால் அருகாமையில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நிர்வாக நலன் கருதி மாற்றுப்பணிபுரிய ஆணை வழங்க பரிசீலனை செய்யப்பட வேண்டும்.
மதுரையில் குழந்தைகளுக்கு நுங்கு வண்டி செய்து கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சமூக ஆர்வலர்