விஜய், அஜித், முதல்.. நயந்தாரா, சமந்தா வரை... மதம் கடந்து திருமணம் செய்த பிரபலங்கள்! யார் யார் தெரியுமா?

First Published Apr 6, 2024, 1:18 PM IST

தமிழ் சினிமாவில், மதம் கடந்து திருமணம் செய்து கொண்ட நடிகர் - நடிகைகள் பற்றிய தகவலைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
 

காதலுக்கு மதம், மொழி, நிறம், என்பது கிடையாது இதனை பல காதல் ஜோடிகள் நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்கள் பலர், மதம் கடந்து, காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர் அவர்கள் யார் யார் என்பது பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
 

குஷ்பூ - சுந்தர் சி 

80-பது  மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் பல ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் குஷ்பூ. மும்பையை சேர்ந்த இவர், பிறப்பால் ஒரு முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். ஆனால் ஹிந்து மதத்தை சேர்ந்த இயக்குனர் சுந்தர்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு அவந்திகா, அனந்திடா என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். கணவரின் குடும்ப வழக்கப்படி இந்து சமூகத்தை பின்பற்றி வருகிறார்.

Maayoney Song: அனைத்துத்தரப்பு பெண்களையும் இசையில் மயக்கும் இசையமைப்பாளர் டி.இமானின் ‘மாயோன்‘ பாடல் !!
 

அஜித் - ஷாலினி

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் அஜித், பிறப்பால் ஒரு இந்து மதத்தை சேர்ந்தவர் என்றாலும்... கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர். இவர்கள் இருவருமே தற்போதைய இளம் நட்சத்திர ஜோடிகளுக்கு, ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகின்றனர்.
 

Vijay

விஜய் - சங்கீதா

தமிழ் சினிமாவில், தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் தளபதி விஜய்... நடிப்பை தாண்டி அரசியலிலும் தடம் பதித்துள்ளார். 'தமிழக வெற்றிக் கழகம்' என்கிற பெயரில் கட்சி ஒன்றை துவங்கி உள்ள விஜய், 2026-ல் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். எனவே அடுத்ததாக நடிக்க உள்ள படம் தான் தன்னுடைய கடைசி படம் என கூறியுள்ளார்.  தளபதி விஜய் பிறப்பால் ஒரு கிறிஸ்தவர் என்றாலும், இந்து மதத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்கிற மகனும், திவ்யா ஷாஷா என்கிற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Aadujeevitham Box Office: 14 வருட உழைப்புக்கு கிடைத்த பெருமை! 100 கோடி வசூலை எட்டிய 'ஆடுஜீவிதம்' திரைப்படம்!

சூர்யா - ஜோதிகா 

நீண்ட காலம் காதலித்து பல்வேறு எதிர்ப்புகளைக் கடந்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டவர்கள் தான் சூர்யா - ஜோதிகா ஜோடி. திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து விலகிய ஜோதிகா, தற்போது மீண்டும் முழு வீச்சில் நடிக்க துவங்கி உள்ளார். தமிழை தாண்டி பாலிவுட் திரையுலகிலும் கால் பதித்துள்ள ஜோதிகா, பிறப்பால் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். இவர் ஹிந்து மதத்தைச் சேர்ந்த, நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா என்கிற மகளும் தேவ் என்கிற மகனும் உள்ளனர்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாரா, தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்தை பெற்றவர். இவர் பிறப்பால் கேரள கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். இவர் ஏற்கனவே சில காதல் தோல்விகளை சந்தித்த நிலையில், 'நானும் ரவுடிதான்' படத்தில் நடிக்கும் போது, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்க துவங்கினார். விக்னேஷ் சிவன் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த முறைப்படி திருமணம் செய்து கொண்ட நயன்தாரா, கணவருக்காக ஹிந்து மதத்தை தொடர்ந்து பின்பற்றி வருகிறார்.

Prashanth Net Worth: டாப்பில் இருந்த போதே.. வருமானத்துக்கு வெயிட்டாக பிளான் போட்ட பிரஷாந்த்! சொத்து மதிப்பு!
 

சமந்தா - நாகை சைத்தன்யா:

நடிகை சமந்தா, தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜூனாவின் மகன், நாக சைதன்யாவை சுமார் 9 ஆண்டுகளுக்கு மேல் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். சமந்தா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்றாலும், நாகசெய்தன்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னர், ஹிந்து மதத்தை பின்பற்ற தொடங்கினார். கணவரை விட்டு பிரிந்த பின்னரும் தற்போது வரை இந்து மதத்தை தொடர்ந்த பின்பற்றி வருகிறார். பல்வேறு இந்து கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமலாபால் - ஏ எல் விஜய்

இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலாபால், ஒரு கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர். இவர்களின் திருமணம் 4 வருடத்திற்குள் விவாகரத்தில் வந்து முடிந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாபால் ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தேசாய் ஒரு ஹிந்து மதத்தை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார் அமலா பால்.

பிஸ்னஸில் கொட்டோ... கொட்டுன்னு கொட்டுது பணம்! கணவர் ஹரியுடன் சேர்ந்து மூன்றாவது ஸ்டுடியோ ஓபன் செய்த ப்ரீத்தா!

yuvan

யுவன் சங்கர் ராஜா - நிஷா

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, பிறப்பால் ஒரு ஹிந்து சமூகத்தை சார்ந்தவர். இவர் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகி, இவருடைய திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்த நிலையில்... திடீரென இஸ்லாம் மதத்திற்கு மாறினார். பின்னர் இஸ்லாம் மதத்தைச் சார்ந்த ஜாப்ரூன் நிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது மகள் ஒருவரும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!