Jackie : அகவை 70.. அடியெடுத்து வைத்த ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான் - அவரின் Net Worth எவ்வளவு தெரியுமா?

First Published Apr 7, 2024, 4:00 PM IST

Jackie Chan Net Worth : ஒரு நடிகருக்கு கடந்த பல ஆண்டுகளாக உலக அளவில் பல கோடி ரசிகர்கள் உள்ளனர் என்றால், அது நிச்சயம் ஜாக்கி சானுக்கு தான் என்றால் அது மிகையல்ல. அந்த அளவுக்கு அவர் ஒரு பிரபலமான நடிகர். 

Jackie chan young photo

ஹாங்காங் நாட்டில் கடந்த 1954ம் ஆண்டு இதே ஏப்ரல் 7ம் தேதி பிறந்தவர் தான் ஜாக்கி சான். சிறு வயது முதலே நடிப்பின் மீது இருந்த அவரது ஆர்வத்தின் காரணமாக தனது எட்டாவது வயதிலிருந்து அவர் திரைத்துறையில் பயணித்து வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் ஹாங்காங் நாட்டில் எடுக்கப்பட்ட சீன மொழி படங்களில் அவர் நடிக்க தொடங்கினார்.

Lal Salaam : ஓடிடியில் ரிலீஸ் ஆகும் முன்னரே டிவி-யில் ஒளிபரப்பாகப் போகும் லால் சலாம் - அதுவும் இந்த தேதியிலா?

Jackie chan

அதன் பிறகு ஹாலிவுட் படங்களில் களமிறங்கிய அவர், பிரபல நடிகர் புரூஸ் லீ அவர்களுடைய ஸ்டண்ட் கலைஞர்களில் ஒருவராக அறிமுகமாகி. அதன் பிறகு தனது திரைப்படங்களை தானே இயக்கி வெளியிட ஆரம்பித்தார். அன்று தொடங்கி அவர் உலக அளவில் மிகவும் பிரபலமாக தொடங்கினார். தமிழ் மொழியில் நடித்ததேயில்லை என்றாலும், இவருக்கும் கோலிவுட் உலகில் ரசிகர்கள் அதிகம்.

Actor Jackie chan

குறிப்பாக இவருடைய தனித்துவமான சண்டைக் காட்சிகளுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டம் எப்பொழுதுமே உண்டு. தன்னுடைய நேர்த்தியான உடல் மொழியாலும், கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பாலும் கடந்த 62 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பயணித்து வரும் ஜாக்கி சான் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருடைய சொத்து மதிப்பு கடந்த 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி சுமார் 350 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 2500 கோடி ரூபாய்.

Vela Ramamoorthy: என் பொண்டாட்டி எனக்கு மகள் முறை வரும்.. திருமணம் பற்றி எதிர்நீச்சல் வேல ராமமூர்த்தி ஓபன்டாக்

click me!