Veetla Vishesham: வசூல் வேட்டையில் பட்டையை கிளப்பும் வீட்ல விசேஷம்...3 நாள் முடிவில் எத்தனை கோடி தெரியுமா...?

First Published Jun 20, 2022, 12:08 PM IST

Veetla Vishesham Box office Collection: ஆர்.ஜே.பாலாஜி நடித்து, இயக்கியுள்ள வீட்ல விசேஷம் திரைப்படம், 3 நாள் முடிவில் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

ஆர்.ஜே.பாலாஜி வானொலியில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே ''கிராஸ் டாக்'' என்ற நிகழ்ச்சியின் மூலம்  ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விட்டார். இதையடுத்து, சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி நானும் ரவுடி தான், தேவி, இவன் தந்திரன் போன்ற படங்களில் நடித்து அசத்தினார். இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு வெளியான எல்.கே.ஜி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். 

இதையடுத்து நயன்தாராவுடன் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்த அவர், அப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். இப்படம் கடந்த 2020-ம் ஆண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதையடுத்து, சினிமாவில் தற்போது இயக்குனர், நடிகர் என கலக்கி வருகிறார்.

இந்த நிலையில், ஆர்.ஜே.பாலாஜி தற்போது இயக்கி, நடித்துள்ள திரைப்படம் வீட்ல விசேஷம். இந்த  படம் பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியான 'பாதாய் ஹோ' என்கிற காமெடி படத்தை தற்போது தமிழில் ரீமேக் ஆகும். இப்படத்துக்கு ‘வீட்ல விசேஷங்க’ என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

RJ Balaji

படம் கடந்த ஜூன் 17 அன்று ரிலீஸ் ஆகி இருந்தது, படத்திற்கு ரசிகர்களும் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளனர். இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் சேர்ந்து, சத்யராஜ், அபர்ணா பாலமுரளி, ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

veetla-vishesham

இந்த நிலையில், இந்த படத்தின் வசூல் விவரம் தொடர்ந்து வெளியாகி வருகிறது. முதல் நாளிலேயே நல்ல வசூலை எட்டிய வீட்ல விசேஷம் 3 நாள் முடிவில் தமிழகத்தில் இதுவரை ரூ. 6 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களிலும் படம் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என்கின்றனர் சினிமா துறை வல்லுநர்கள். இதனால், ஆர்.ஜே.பாலாஜி செம்ம குஷியில் உள்ளாராம். 

 மேலும் படிக்க....Nayan: இந்த ஆள போயி எதுக்கு கல்யாணுத்துக்கு கூப்பிட்டீங்க? நயன்தாரா மீது கடும் கோபத்தில் இருக்கும் ரசிகர்கள்

click me!