Tulasi Vastu : வீட்டில் துளசி செடி இருக்கா? அப்ப இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.. பண கஷ்டம் அதிகரிக்குமாம்..

First Published Mar 28, 2024, 11:21 AM IST

வீட்டில் துளசி செடி வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் துளசி செடி காய்ந்துவிட்டால் என்ன அர்த்தம் என்பது குறித்தும் பார்க்கலாம்..

tulsi leaves

இந்து மதத்தில் துளசி செடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் துளசிக்கு செல்வத்தின் தெய்வமான லக்ஷ்மி தேவியின் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதால் அது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. எனவே பலரும் துளசி செடியை லட்சுமி தேவியின் வடிவில் வழிபட்டு வருகின்றனர். வீட்டில் துளசி செடி வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் துளசி செடி காய்ந்துவிட்டால் என்ன அர்த்தம் என்பது குறித்தும் பார்க்கலாம்..

tulsi leaves

வாஸ்து சாஸ்திரத்தின் படி, துளசி செடிகளை வீட்டின் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் எப்போதும் வைக்க வேண்டும். இந்த திசையில் தெய்வங்கள் இருப்பதாக ஐதீகம். துளசி செடிகளை தவறுதலாக கூட வீட்டின் தெற்கு திசையில் வைக்கக்கூடாது என்று சொல்லப்படுகிறது. இந்த திசை பித்ருவுக்குரியது என்பதால், இங்கு துளசி செடியை வைத்தால் பெரும் நிதி இழப்பு ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

துளசி செடிகளை வீட்டின் நுழைவாயிலிலோ அல்லது குப்பைகள் வைக்கும் இடத்திலோ அல்லது செருப்பு அகற்றும் இடத்திலோ ஒருபோதும் நடக்கூடாது. துளசி செடியை எப்போதும் மண் பானையில் வைக்க வேண்டும். பிளாஸ்டிக் பாத்திரங்களை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். 

வீட்டில் இருக்கும் துளசி செடி காயாமல் பச்சை நிறந்தில் இருந்தால் அந்த குடும்பத்திற்கு கடவுளின் ஆசீர்வாதம் கிடைத்துள்ளது என்று கருதப்படுகிறது. ஆனால் அதே நேரம் வீட்டில் இருக்கும் துளசி செடி அடிக்கடி காய்ந்து போனாலும், அல்லது செடி வளராமல் இருந்தாலும் வீட்டில் ஏதேனும் அசபகுணம் நிகழ்வுகள் நிகழப்போகிறது என்பதை குறிக்கும் அறிகுறியாக இருக்கலாம்..

பச்சையாக இருக்கும் துளசி செடி திடீரென காய்ந்து போனால்  வீட்டில் எதிர்மறை ஆற்றல் மற்றும் தீய சக்திகள் இருப்பதை குறிக்கும் அறிகுறியாகும். இதனால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் ஏற்படலாம். வேலை செய்யும் இடத்திலும், செய்யும் தொழிலிலும் இடையூறு ஏற்படலாம். 

துளசி செடியை சரியாக பராமரிக்கவில்லை என்றாலும் அதன் தாக்கம் வெளிப்படையாகவே தெரியும். குடும்பத்தினரிடையே போதிய ஒற்றுமை இல்லை என்பதையும், இதனால் குடும்பத்தில் சச்சரவுகள் ஏற்படும் என்பதையும் இது குறிக்கும். மோதல்கள், சச்சரவுகள் உள்ள வீட்டில் லட்சுமி நுழைவதில்லை. 

வீட்டில் இருக்கும் துளசி நேர்மறை ஆற்றலை கொடுக்கக்கூடியது. ஆனால் இந்த துளசி காய ஆரம்பித்தால் வீட்டில் நேர்மறை ஆற்றல் குறைவதற்கான அறிகுறியாகும். அதே போல் வீட்டில் துளசி செடி காயாமல் இருந்தால் செல்வசெழிப்புமம் , மகிழ்ச்சியும் இருக்கும் என்று அர்த்தம்.. அதே நேரம் துளசி செடி காய்ந்து போனால் குடும்பத்தில் பணக் கஷ்டமும், நிதி இழப்பும் ஏற்படும் என்பதற்கான அறிகுறியாகும். 

click me!