சாஷ்டாங்கமாக சரண்டரான குஜராத் டைட்டன்ஸ் – பெங்களூருவில் கெத்து காட்டிய ஆர்சிபி – 147 ரன்கள் எடுத்த ஜிடி!

First Published May 4, 2024, 10:18 PM IST

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான 52ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியானது 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

Royal Challengers Bengaluru vs Gujarat Titans, 52nd Match

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 52ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் ஃபாப் டூப்ளெசிஸ் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியானது 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மடுமே எடுத்தது.

Royal Challengers Bengaluru vs Gujarat Titans, 52nd Match

சுப்மன் கில் மற்றும் விருத்திமான் சகா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், சகா 1 ரன்னிலும், கில் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சாய் சுதர்சன் 6 ரன்னில் வெளியேறினார். ஷாருக்கான் மற்றும் டேவிட் மில்லர் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து ரன்கள் சேர்த்தனர்.

Royal Challengers Bengaluru vs Gujarat Titans, 52nd Match

மில்லர் 30 ரன்னிலும், ஷாருக் கான் 37 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதில், ஷாருக் கான் ரன் அவுட் முறையில் விராட் கோலியிடம் ஆட்டமிழந்தார். ஷாருக் கானை ரன் அவுட் செய்த மகிழ்ச்சியில் அனுஷ்கா சர்மா பிளையிங் கிஸ் கொடுத்தார்.

Royal Challengers Bengaluru vs Gujarat Titans, 52nd Match

அடுத்து வந்த ரஷீத் கான் 18, விஜய் சங்கர் 10, மானவ் சுதர் 1, மோகித் சர்மா 0 என்று சொற்ப ரன்களில் வெளியேற குஜராத் டைட்டன்ஸ் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Royal Challengers Bengaluru vs Gujarat Titans, 52nd Match

பவுலிங்கைப் பொறுத்த வரையில் முகமது சிராஜ், யாஷ் தயாள், விஜயகுமார் வைஷாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். கேமரூன் க்ரீன் மற்றும் கரண் சர்மா தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

click me!