பாலக்காடு ஸ்ரீராம்.. இவரை பற்றி கேள்வி பட்டுருக்கீங்களா? தமிழில் இவர் பாடின எல்லாமே சூப்பர் ஹிட் சாங்ஸ் தான்!

First Published Dec 9, 2023, 1:41 PM IST

Palakkad Sreeram : தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக தன்னுடைய குரலால் பலரை கட்டி போட்ட அய்யா அமரர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் முதல் இன்று பல இளைஞர்கள் மனதில் குடி கொண்டிருக்கும் சித் ஸ்ரீராம் வரை அனைவரையும் பற்றி நாம் அறிந்திருப்போம்.

AR Rahman

ஆனால் தமிழ் திரை உலகில் கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த பாலக்காடு ஸ்ரீராம் அவர்களைப் பற்றி நாம் பெரிய அளவில் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மிகவும் தனித்துவமான குரலை கொண்ட அவர் பற்றியும், தமிழ் மொழியில் அவர் பாடிய பாடல்கள் குறித்தும் இந்த பதிவில் காணலாம்.

கேரளாவில் பிறந்த பாலக்காடு ஸ்ரீராம் சிறு வயதிலிருந்தே இசை மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக அதில் பட்டப் படிப்பை முடித்து பல மேடைகளில் பாடல்களை பாடி வந்தார். பல்வேறு இசை கருவிகளை வாசிக்கவும் பழகிய ஸ்ரீராம் ஒரு கட்டத்தில் சினிமா பாடல்களை பட ஆசை கொண்டார். அப்போது அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் 'உயிரே" என்ற படம்.

டிஸ்சார்ஜ் ஆகும் நேரத்தில் இப்படி ஆகிடுச்சே... மீண்டும் தீவிர சிகிச்சையில் கேப்டன் விஜயகாந்த்..?

Singer Sreeram

ஆம், கடந்த 1998 ஆம் ஆண்டு இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் அவர்களுடைய இசையில் பாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதை நேர்த்தியாக பயன்படுத்திக் கொண்டு அவர் தமிழ் திரையுலகுக்கு அளித்த முதல் பாடல் இன்றளவும் பலருடைய விஷ் லிஸ்டில் இருக்கும் "தைய தையா" பாடல் தான். அந்த எவர் கிறீன் சூப்பர் ஹிட் பாடலை மால்குடி சுபா அவர்களுடன் இணைந்து பாடியது பாலக்காடு ஸ்ரீராம் அவர்கள் தான். 

Veteran Singer Sreeram

அதைத் தொடர்ந்து படையப்பா படத்தில் வந்த "மின்சார பூவே" மற்றும் "வெற்றி கொடி கட்டு", தாஜ்மஹால் படத்தில் வந்த "திருப்பாச்சி அருவாள" பாடல், சாமி திரைப்படத்தில் ஒலித்த "திருநெல்வேலி அல்வாடா" பாடல், மன்மதன் படத்தில் வரும் "வானமுன்னா பொறுமை காட்டு" என்கின்ற பாடல் துவங்கி, அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் வரும் "ராட்சச மாமனே" என்கின்ற பாடல் வரை எல்லாம் அவர் பாடிய பாடலே. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!