பிக்பாஸ் சீசன் 8 பிள்ளையார் சுழி போட்டாச்சு! சர்ச்சை பிரபலத்தை காதலியோடு களமிறக்க பிளான் போடும் விஜய் டிவி!

First Published Jun 11, 2024, 7:23 PM IST

பிக்பாஸ் சீசன் 7 ஜனவரி மாதத்துடன் முடிவடைந்த நிலையில்... தற்போது சீசன் 8 குறித்த பேச்சு வார்த்தைகள் துவங்கி விட்டதாக சமூக வலைதளத்தில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது.
 

பிக்பாஸ் சீசன் 1 எப்படி மிகவும் பரபரப்பாகவே இருந்ததோ... அதே போல் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியும் ஓவ்வொரு நாளும் ரணகளமான நாட்களாகவே சென்றது. ஆனால் எதார்த்தம் என்பதை தான், மாயா, பூர்ணிமா, பிரதீப் ஆண்டனி ஆகியோர் தங்களுக்குள்ளேயே ஸ்டேடர்ஜியை புகுத்தி விளையாடியதால் ரசிகர்களுக்கு சலிப்பு தட்டியது.
 

அதே நேரம் பிரதீப் ஆண்டனி, ஒரு விழா ஸ்டேடர்ஜியை கையாண்டாலும் கூடவே... டாஸ்க், மற்றும் சக போட்டியாளர்களுடன் பழகும் போது உண்மையாக இருந்தார். பிரதீப் உள்ளே இருந்தால் கண்டிப்பாக டைட்டிலை கைப்பற்றி விடுவார் என்பதால், அவரை முதுகில் குத்தி சில போட்டியாளர்கள் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினர்.

Priya Bhavani: நடிகை பிரியா பவானி ஷங்கரா இது? பாவாடை சட்டையில் அடையாளமே தெரியல.. வைரலாகும் Childhood போட்டோ!
 

இந்த ரெட் கார்டு விஷயம், கமல்ஹாசனுக்கே பிரச்சனையாக மாறியது. இவரின் செயல் சிறந்த நடுவருக்கான அடையாளம் இல்லை என்பதையும் உணர்த்தியது. 
 

ஆனால் இந்த சீசனில் யாரும் எதிர்பாராதது என்றால் அது அர்ச்சனாவுக்கு கூடிய ரசிகர்கள் கூட்டத்தை தான். அவர் காசு கொடுத்து இது போல் செய்கிறார் என்கிற விமர்சனம் வந்த போது கூட அதற்க்கு தக்க பதிலடி கொடுத்தார். மாயாவை பின்னுக்கு தள்ளி டைட்டில் பட்டத்தையும் பெற்றார். முதல் ரன்னரப்பாக மணி சந்திரா மாறிய நிலையில், இரண்டாவது ரன்னரப்பாக மாயா மாறினார்.

நடிகையுடன் கள்ள தொடர்பு! கையும் களவுமாக சிக்கினார்.. யுவா பற்றி சூப்பர் ஸ்டார் வீட்டு மருமகள் கூறிய ஷாக் தகவல்

ஜனவரி மாதம் பிக்பாஸ் சீசன் 7 முடிவடைந்த நிலையில், தற்போது சீசன் 8 குறித்த பேச்சு வார்த்தை துவங்கி உள்ளது. குக் வித் கோமாளி முடிந்த கையேடு இதை துவங்க விஜய் டிவி தரப்பு முடிவு செய்துள்ளதாம். இதற்காக ஒரு காதல் ஜோடியை... பிக்பாஸ் குழுவினர் அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.
 

அவர்கள் வேறு யாரும் இல்லை யூடியூப் பிரபலமும், நடிகருமான TTF வாசன் மற்றும் அவரின் காதலி சோயா ஷாலினை தான். சோயா ஷாலினி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக இவர் மலையாளம் கலந்து பேசும் தமிழ் பல ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Aishwarya and Umapathy Wedding Photos: அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவை கரம்பிடித்தார் உமாபதி ராமையா! திருமண போட்டோஸ்!
 

சோயாவிடம் ஏற்கனவே விஜய் டிவி குழு பேசிவிட்ட நிலையில்... அவர் மூலம் TTF வாசனையும் அணுகி இருவரையும் ஜோடியாக உள்ளே போட்டு, ஒரு ரொமான்டி படம் ஓட்டும் ஐடியாவில் இப்படி ஒரு பிளான் போயுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
 

Latest Videos

click me!