ஒவ்வொரு முறையும் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வந்த தென் ஆப்பிரிக்கா 32 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு முதல் முறையாக தற்போது டி20 உலகக் கோப்பை தொடரின் மூலமாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கும் ஒரு முறையும் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரானது நடத்தப்பட்டு வருகிறது. முதல் முறையாக 1975 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரானது நடத்தப்பட்டது. இதுவரையில், 13 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட்டுள்ளது.
இதில், 4 முறை மட்டுமே தென் ஆப்பிரிக்கா அரையிறுதிப் போட்டி வரை வந்து தோல்வியோடு வெளியேறியுள்ளது. இதே போன்று இதுவரையில் 8 டி20 உலகக் கோப்பை தொடரானது நடத்தப்பட்டுள்ளது. இதில், 2 முறை மட்டுமே டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு வந்து தோவியோடு வெளியேறியது.
இந்த நிலையில் தான் நடப்பு ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை தொடரின் மூலமாக 3ஆவது முறையாக தென் ஆப்பிரிக்கா அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதில், இன்று காலை டிரினிடாட்டில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 11.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் எளிய இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா 8.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 60 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மேலும், 32 ஆண்டுகள் போராட்டத்திற்கு முதல் முறையாக வெற்றி கிடைத்துள்ளது. அதன்படி, தென் ஆப்பிரிக்கா முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக முதல் முறையாக 1992 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டிக்கு சென்று தோல்வி அடைந்தது. பின்னர் 1999 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது. இதே போன்று 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியிலும் தோல்வி அடைந்து வெளியேறியது.
கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது. 2014 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியிலும் தோல்வி அடைந்தது. 2015 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அரையிறுதியிலும் தோல்வி அடைந்து வெளியேறியது. கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக தென் ஆப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.