ஆப்கானிஸ்தானுக்கு ஆப்பு வச்ச தென் ஆப்பிரிக்கா – முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை!

By Rsiva kumar  |  First Published Jun 27, 2024, 8:48 AM IST

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது.


தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்று முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்கள் மட்டுமே எடுத்து மிகவும் மோசமான சாதனை படைத்தது. அதுவும், அரையிறுதிப் போட்டியில் குறைந்த ஸ்கோர் எடுத்த முதல் அணியாக ஆப்கானிஸ்தான் மோசமான சாதனைக்கு தள்ளப்பட்டது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் எக்ஸ்டிராஸ் மூலமாக ஆப்கானிஸ்தானுக்கு 13 ரன்கள் கிடைத்திருக்கிறது. இல்லையென்றால் ஆப்கானிஸ்தான் வெறும் 43 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கும். பின்னர், எளிய இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணியில் குயீண்டன் டி காக் மற்றும் ரீசா ஹெண்ட்ரிக்ஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், குயீண்டன் டி காக் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த எய்டன் மார்க்ரம் நிதானமாக விளையாடினார்.

Latest Videos

undefined

இறுதியாக ஹெண்ட்ரிக்ஸ் 29 ரன்களும், மார்க்ரம் 23 ரனக்ளும் எடுக்கவே தென் ஆப்பிரிக்கா 8.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதோடு, முதல் முறையாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கு முன்னதாக முதல் முறையாக 1992 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டிக்கு சென்று தோல்வி அடைந்தது. பின்னர் 1999 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது. இதே போன்று 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியிலும் தோல்வி அடைந்து வெளியேறியது.

கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது. 2014 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியிலும் தோல்வி அடைந்தது. 2015 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அரையிறுதியிலும் தோல்வி அடைந்து வெளியேறியது. கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக தென் ஆப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!