Latest Videos

60 நிமிடத்தில் முடிந்த முதல் இன்னிங்ஸ்- ஆப்கானிஸ்தான் சோலியை முடிச்ச தென் ஆப்பிரிக்கா, 56 ரன்களுக்கு காலி!

By Rsiva kumarFirst Published Jun 27, 2024, 8:09 AM IST
Highlights

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான சாதனை படைத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி தற்போது டிரினிடாட்டில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜத்ரன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

இதில் குர்பாஸ் 0, ஜத்ரன் 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். அடுத்து வந்த குல்பதீன் நைப் 9 ரன்னிலும், அஸ்மதுல்லா உமர்சாய் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்வரிசையில் வந்த முகது நபி 0, கரீம் ஜனத் 8, ரஷீத் கான் 8, நூர் அகமது 0, நவீன் உல் ஹக் 2 என்று வரிசையாக ஆட்டமிழந்தனர். இவர்கள் மொத்தமாகவே 22 ரன்கள் எடுத்தனர். கடைசியாக ஆப்கானிஸ்தான் 11.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான சாதனையை படைத்துள்ளது.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் எக்ஸ்டிராஸ் மூலமாகவே 13 ரன்கள் வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் தென் ஆப்பிரிக்கா அணியில் மார்கோ ஜான்சென், தப்ரைஸ் ஷம்ஸி  தலா 3 விக்கெட்டும், கஜிசோ ரபாடா, ஆண்ட்ரிச் நோர்ட்ஜே தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக குறைவாக என் எடுத்த அணிகளில் ஆப்கானிஸ்தான் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக இலங்கை 77 ரன்கள் எடுத்திருந்தது. ஆப்கானிஸ்தான் 80 ரன்கள் (2010) எடுத்திருந்தது.  ஸ்காட்லாந்து 81 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் குறைவான ரன்கள் எடுத்த அணிகளில் ஆப்கானிஸ்தான் முதலிடம் பிடித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் அரையிறுதிப் போட்டியில் 56 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதற்கு முன்னதாக வங்கதேச அணிக்கு எதிராக 71 ரன்களும், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 80 ரன்களும், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 80 ரன்களும், எடுக்கப்பட்டதே குறைவான ரன்கள் ஆகும்.

இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து குறைவாக ரன்கள் எடுத்த அணிகளில் ஆப்கானிஸ்தான் முதலிடம் பிடித்துள்ளது. ஆனால், அரையிறுதிப் போட்டியில் குறைவான ரன்களுக்கு ஆட்டமிழப்பது இதுவே முதல் முறையாகும். ஆம், இதுவரையில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டிகளில் 56 ரன்கள் எடுக்கப்பட்டதே குறைவான ஸ்கோர் ஆகும்.

click me!