Latest Videos

டி20 உலகக் கோப்பை சாம்பியன்ஸ் லிஸ்ட் – முதல் முறையாக இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அல்லது ஆப்கானிஸ்தான்!

By Rsiva kumarFirst Published Jun 26, 2024, 9:58 PM IST
Highlights

டி20 உலகக் கோப்பையை இதுவரையில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் வென்றதில்லை. அதற்கான வாய்ப்பு தற்போது அமைந்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகள் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரையில் நடைபெற்ற 8 தொடர்களில் தொடரை நடத்திய அணிகள் டிராபியை கைப்பற்றியதில்லை. உதாரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரை இந்தியா நடத்தியது. அந்த தொடரில் இந்தியா 2ஆவது அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.

முதல் முறையாக டி20 உலகக் கோப்பை தொடரை தென் ஆப்பிரிக்கா நடத்தியது. அந்த தொடரில் இந்தியா முதல் முறையாக சாம்பியனானது. இந்த நிலையில் தான் தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதே போன்று 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

ஏற்கனவே முதல் சீசனில் இந்தியாவும், கடைசியாக நடைபெற்ற சீசனில் இங்கிலாந்தும் டிராபியை வென்ற நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் டிராபியை வெல்ல நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. எனினும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஒருவேளை போட்டியானது முழுமையாக நடைபெற்றால் இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இங்கிலாந்திற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

டி20 உலகக் கோப்பை வின்னர்ஸ்:

இந்தியா (2007 டி20 உலகக் கோப்பை)

எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக டி20 உலகக் கோப்பை தொடரை வென்றது. இந்த தொடரில் இந்திய அணி நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் மட்டும் தோல்வியை தழுவியது. கடைசியில் இறுதிப் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்தது.

பாகிஸ்தான் (2009 டி20 உலகக் கோப்பை)

முதல் டி20 உலகக் கோப்பை தொடரில் 2ஆவம் இடம் பிடித்த பாகிஸ்தான் 2009 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரை வென்றது. இங்கிலாந்து இந்த தொடரை நடத்தியது. இறுதிப் போட்டியில் இலங்கையை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழத்தி பாகிஸ்தான் டிராபியை கைப்பற்றியது. இந்த தொடரில் பாகிஸ்தான், இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது. முக்கியமான போட்டியில் இலங்கையிடமும் தோல்வி அடைந்து கடைசியில் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து (2010 டி20 உலகக் கோப்பை)

2010 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரை வெஸ்ட் இண்டீஸ் நடத்தியது. இந்த தொடரில் ஆசியா அல்லாத ஒரு அணி முதல் முறையாக டிராபியை வென்றது. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து டிராபியை வென்றது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸிடம் தோல்வி அடைந்த இங்கிலாந்து அதன் பிறகு நடைபெற்ற எல்லா போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் (2012 டி20 உலகக் கோப்பை)

2012 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரை இலங்கை நடத்தியது. இதில், இலங்கையை வீழ்த்தி முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் டிராபியை கைப்பற்றியது.

இலங்கை (2014 டி20 உலகக் கோப்பை)

முதல் முறையாக இலங்கை 2014 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரை வென்றது. இந்த தொடரில் இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை டிராபியை கைப்பற்றியது. இதற்கு முன்னதாக 2009 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் இலங்கை இறுதிப் போட்டி வரை வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வெஸ்ட் இண்டீஸ் (2016 டி20 உலகக் கோப்பை)

இந்த தொடரில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில், வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 2ஆவது முறையாக சாம்பியனானது. இதற்கு முன்னதாக 2012 ஆம் ஆண்டு டிராபியை வென்றது.

ஆஸ்திரேலியா (2021 டி20 உலகக் கோப்பை)

ஐக்கிய அரபு நாட்டில் நடந்த இந்த தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. இதில், ஆஸ்திரேலியா வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியனானது.

இங்கிலாந்து (2022 டி20 உலகக் கோப்பை)

இந்த தொடரில் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு வந்த இங்கிலாந்து, இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இங்கிலாந்து 2ஆவது முறையாக டிராபியை வென்றது.

click me!