நம்பர் 1 இடத்தை இழந்த சூர்யகுமார் யாதவ் – டிராவிட் ஹெட் முதலிடம் பிடித்து சாதனை!

By Rsiva kumar  |  First Published Jun 26, 2024, 3:17 PM IST

ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் நம்பர் 1 இடம் பிடித்துள்ளார்.


அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரானது இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. இதில், நாளை நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும், 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளும் மோதுகின்றன.

இதையடுத்து வரும் 29 ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இந்த நிலையில் தான் ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் ஒரு இடம் சரிந்து 2ஆவது இடம் பிடித்துள்ளார்.

Latest Videos

undefined

ஆஸ்திரேலியாவின் அதிரடி தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 4 இடங்கள் முன்னேறி நம்பர் 1 இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்று விளையாடினார். இந்த தொடரில் ஹெட் 11 போட்டிகளில் விளையாடி 533 ரன்கள் எடுத்திருந்தார்.

இதே போன்று மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் 11 போட்டிகளில் விளையாடி 345 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 7ஆவது இடத்தில் நீடிக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 6 இடங்கள் சரிந்து 19ஆவது இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!