டக்வொர்த் லூயிஸ் முறையை உருவாக்கியவர்களில் ஒருவரான ஃபிராங்க் டக்வொர்த் 84 வயதில் காலமானார்.
கிரிக்கெட்டில் அழியாத முத்திரையை பதித்தவர் ஃபிராங்க் டக்வொர்த். கிரிக்கெட்டில் மழையால் பாதிக்கப்பட்ட போட்டிகளில் இவரது டக்வொர்த் லூயிஸ் முறை முக்கிய பங்கு வகிக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட போட்டிகளில் டக்வொர்த் லூயிஸ் முறையில் புரட்சியை ஏற்படுத்தியவர் ஃபிராங்க் டக்வொர்த். கடந்த 21 ஆம் தேதி தனது 84ஆவது வயதில் காலமானார். இவரது மறைவுக்கு கிரிக்கெட் உலகம் இரங்கல் தெரிவிக்கிறது.
புள்ளியியல் நிபுணரான டோனி லூயிஸ் உடன் இணைந்து ஃபிராங்க் டக்வொர்த் லூயிஸ் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கு மழை பாதிப்பு ஏற்படும் போது இலக்கு மாற்றங்களை உறுதிப்படுத்துவதற்கு டிஎல்எஸ் முறையை உருவாக்கினார். அவர் உருவாக்கிய டிஎல் எஸ் முறையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 1999 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது.
ராயல் ஸ்டாடிஸ்டிகல் சொசைட்டியானது, DLS முறை மூலம் கிரிக்கெட்டில் ஃபிராங்க் டக்வொர்த்தின் நீடித்த தாக்கத்தையும் எடுத்துரைத்து அவருக்கு அஞ்சலி செலுத்தியது. உலோகவியலில் பயிற்சி பெற்றிருந்த டக்வொர்த், அதன் பிறகு புள்ளியல் மீது ஆர்வம் கொண்டு டக்வொர்த் லூயிஸ் முறையை உருவாக்கினார்.
கடந்த 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தும், தென் ஆப்பிரிக்காவும் மோதின. இதில், மழையின் காரணமாக போட்டி பாதிக்கப்பட்டது. அப்போது டக்வொர்த் லூயிஸ் முறையின் மூலமாக தென் ஆப்பிரிக்காவிற்கு ஒரு பந்தில் 22 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடைசியில் இங்கிலாந்து 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றது.
டோனி லூயிஸ் மற்றும் ஃபிராங்க் டக்வொர்த் மூலமாக உருவாக்கப்பட்ட ஃபார்முலா முதல் முதலாக 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் செயல்படுத்தப்பட்டது. பின்னர் டக்வொர்த் மற்றும் லூயிஸ் ஓய்விற்கு பிறகு இந்த முறையானது ஆஸ்திரேலியா புள்ளியியல் நிபுணர் ஸ்டீவன் ஸ்டெர்னால் புதுப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த முறையானது, டக்வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் முறை என்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடட்தக்கது.