டிஸ்சார்ஜ் ஆகும் நேரத்தில் இப்படி ஆகிடுச்சே... மீண்டும் தீவிர சிகிச்சையில் கேப்டன் விஜயகாந்த்..?

First Published Dec 9, 2023, 1:32 PM IST

விஜயகாந்த் உடல்நலம் தேறி டிஸ்சார்ஜ் ஆக இருந்த நிலையில், தற்போது அவருக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டதால் மீண்டும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Captain Vijayakanth

நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் சளி, இருமல் தொல்லையால் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த மாதம் சிகிச்சைக்காக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கடந்த வாரம் மருத்துவமனை நிர்வாகம் திடீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதைப்பார்த்து அவரது ரசிகர்களும், தொண்டர்களும் பதறிப்போயினர்.

Premalatha Vijayakanth

பின்னர் இதுகுறித்து விளக்கம் அளித்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, கேப்டன் நலமுடன் இருப்பதாகவும், அது வழக்கமான அறிக்கை தான், தொண்டர்கள் பயப்பட வேண்டாம் எனக்கேட்டுக்கொண்டதோடு, விஜய்காந்த் உடன் எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டு இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இருப்பினும் விஜயகாந்தின் உடல்நிலை குறித்த வதந்திகள் தொடர்ந்து பரவிய வண்ணம் இருந்தன.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos


Vijayakanth hospitalized in Chennai

இதனால் கடுப்பான பிரேமலதா, சென்னையில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, யூடியூப் சேனல்கள், கேப்டன் மேல் ஏன் இவ்வளவு வன்மத்தை கொட்டுகிறீர்கள் என கேள்வி எழுப்பினர். அப்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் பிரேமலதா கூறினார். அதுமட்டுமின்றி அவர் ஓரிரு தினங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

vijayakanth health

இந்த நிலையில், கேப்டன் விஜயகாந்திற்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஆக்சிஜன் உதவியுடன் விஜயகாந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம். இருப்பினும் மருத்துவமனை நிர்வாகமோ அல்லது விஜயகாந்த் தரப்போ இதுகுறித்து எந்த வித அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. 

இதையும் படியுங்கள்... மகனை தொடர்ந்து மகளின் திருமணம்.. தளபதி 68 பட நடிகர் ஜெயராம் வீட்டில் களைகட்டும் கல்யாண சீசன்

click me!