vuukle one pixel image

அப்போ த்ரிஷா இல்லையா? சோலோவாக அசத்தும் தளபதி - GOAT நான்காம் சிங்கிள் இதோ!

Ansgar R  | Published: Aug 31, 2024, 6:27 PM IST

தளபதி விஜய் முதல் முறையாக பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்தவரும் திரைப்படம் தான் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்". இது அவருடைய 68வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர், நடிகைகள் பிரபுதேவா, பிரசாந்த், லைலா, சினேகா மற்றும் ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். அதேபோல தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் மைக் மோகனும் வில்லனாக இப்படத்தில் நடித்து அசத்தியுள்ளார். அதே போல இயக்குனர் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளனர். 

ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து மூன்று சிங்கிள் பாடல்கள் வெளியானது, குறிப்பாக "விசில் போடு" மற்றும் "சின்ன சின்ன கண்கள் திறக்கின்றதே" ஆகிய இரண்டு பாடல்களும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. ஆனால் மூன்றாவதாக வெளியான "ஸ்பார்க்" என்கின்ற பாடலில் De-Aging டெக்னாலஜி பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்நிலையில் அவற்றை எல்லாம் சரி செய்யும் விதமாக கோட் படத்தின் நான்காவது சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. 

பிரபல பாடல் ஆசிரியர் விவேக் வரிகளில், யுவன் சங்கர் ராஜா இசையில் "மட்ட" என்கின்ற குத்து பாட்டு இப்போது வெளியாகி உள்ளது. நடிகை திரிஷா இந்த பாடலில் தளபதி விஜய்யோடு இணைந்து நடனமாடவுள்ளார் என்கின்ற தகவல்கள் வெளியானது. ஆனால் இப்போது வெளியான அந்த பாடலின் ப்ரோமோவில் திரிஷா இடம்பெறவில்லை. இருப்பினும் திரையரங்குகளில் அந்த பாடல் வெளியாகும்பொழுது, அதில் நடிகை திரிஷா இடம்பெற்றிருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.