Farmula 4 கார் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த உதயநிதி; காற்றை கிழித்துக் கொண்டு பறந்த கார்கள்

First Published | Sep 1, 2024, 12:00 AM IST

சென்னையில் பார்முலா 4 கார் பந்தயத்தை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

Chennai Car Race

பல்வேறு விமர்சனங்களைக் கடந்து சென்னையில் இன்று வெற்றிகரமாக பார்முலா 4 கார் வந்தயம் தொடங்கி உள்ளது. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கார் பந்தயத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 
 

Chennai Car Race

இது தொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை பங்களிப்புடன் நடத்தப்படுகிற Formula 4 Chennai Racing on the Street Circuit-ஐ சென்னைத் தீவுத்திடலில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தோம்.

Tap to resize

Chennai Car Race

அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி – முறையான பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகளுடன் நடைபெறுகின்ற இந்த சர்வதேச அளவிலானப் போட்டியை காண்பதற்கு ஏராளமான பொதுமக்கள் – கார் பந்தய ஆர்வலர்கள் திரண்டிருந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்தோம். இதில் பங்கேற்கும் கார் பந்தய வீரர்களை வாழ்த்தினோம்.

Chennai Car Race

முன்னதாக, கார் பந்தய வீரர்கள் திறம்பட நிகழ்த்திய சாகசங்களை கண்டு மகிழ்ந்தோம். தெற்காசியாவில் முதன்முதலில் நடைபெறும் இந்த இரவு நேர கார் பந்தயப் போட்டி, உலகளவில் இந்தியாவுக்கும் - தமிழ்நாட்டுக்கும் விளையாட்டுத் துறையில் தனி இடத்தைப் பெற்றுத்தரப் போவது உறுதி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos

click me!