ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்.. குறைந்தது டிக்கெட் விலை.. வெளியான மாஸ் அறிவிப்பு.!

First Published Feb 27, 2024, 9:48 AM IST

கொரோனா பரவலின் போது பயணிகள் ரயில் விரைவு ரயில்களாக அறிவிக்கப்பட்டதால் கட்டணம் ரூ.20 உயர்ந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Passenger Train

ரயில் பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக ரயில்வே அமைச்சகம் கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இது தவிர பயணிகளுக்கு பல புதிய வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன் பயணிகள் ரயிலில் குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயாக இருந்தது. 

Southern Railway

பின்னர், கொரோனா பரவலை அடுத்து இந்த கட்டணம் சிறப்பு விரைவு ரயில் என அறிவிக்கப்பட்டு 2 மடங்காக கட்டணம் உயர்த்தப்பட்டது. அதாவது 10 ரூபாய் இருந்த கட்டணம் 30 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதனால், பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என பயணிகள் ரயில்வே நிர்வாகத்து கோரிக்கை விடுத்து வந்தனர். 

இதையும் படிங்க: ஒன்றுக்கொன்று சவால் விடும் சூப்பர் பவர்... செம ஸ்பீடு... ரூ.2.5 லட்சத்திற்குள் கிடைக்கும் பெஸ்டு பைக் எது?

Train Ticket fare reduced

இந்நிலையில் 200 கிலோ மீட்டருக்கு குறைவான தொலைவில் இயக்கப்படும் பயணிகள் ரயில், சிறப்பு கட்டண முறையில் இருந்ததை ரத்து செய்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளதை அடுத்து நேற்று முதல் பழைய கட்டணமே வசூல் செய்யப்படுகிறது. அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றாலும், நேற்று முதல் பழைய கட்டணமான 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. 

click me!