ஒரு படத்திற்கு ரூ.250 கோடி.. இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோ யார்? டாப் 10 நடிகர்கள் லிஸ்ட்..

First Published Mar 6, 2024, 3:04 PM IST

அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 10 இந்திய நடிகர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

ஒருகாலத்தில் இந்திய சினிமா என்றாலே அது பாலிவுட் சினிமா என்ற நிலை இருந்தது. எனவே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் என்றால் அது நிச்சயம் பாலிவுட் நடிகர்களாக தான் இருப்பார்கள். ஆனால் தற்போது தென்னிந்திய படங்கள் பலவும் பான் இந்தியா படங்களாக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பிளாக்ப்ஸ்டர் படங்களாக மாறுகின்றன.. எனவே இந்தியாவின் அதிகம் சம்பளம் வாங்கும் டாப்  நடிகர்களில் பெரும்பாலானவர் தென்னிந்திய அதிலும் குறிப்பாக தமிழ் திரையுலகை சேர்ந்தவர்கள் தான். அதிகம் சம்பளம் வாங்கும் டாப்  இந்திய நடிகர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

ஷாருக்கான்

கிங் கான் என்று அழைக்கப்படும் ஷாருக் கான் தனது திரை வாழ்க்கையில் வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்தித்துள்ளார். ஆனால் 2023 ஆம் ஆண்டில் பதான், ஜவான் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை வழங்கி மீண்டும் கம்பெக் கொடுத்தார். சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான டங்கி படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. 1980களின் பிற்பகுதியில் தொலைக்காட்சித் தொடர்களில் தொடங்கி, 1992 இன் தீவானா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான ஷாருக்கான் தொடர் வெற்றிகளை ருசித்து வந்தார். அவரின் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை முறியடித்துள்ளன. இந்தியாவின், அதிக சம்பளம் நடிகர்கள் பட்டியலில் ஷாருக்கான் முதலிடத்தில் உள்ளார். அவர் ஒரு படத்திற்கு ரூ. 150 கோடி முதல் ரூ.250 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.

ரஜினிகாந்த் :

இந்தியாவின் உச்ச நடிகர்களில் நடிகர் ரஜினிகாந்தும் ஒருவர். 1970களில் அபூர்வ ராகங்கள் மூலம் அறிமுகமான ரஜினி சில ஆண்டுகளிலேயே தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக மாறினார். கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராகவே ரஜினி இருந்து வருகிறார். ரஜினி படம் என்றாலே நிச்சயம் ரூ.100 கோடி வசூலை தாண்டிவிடும் என்பதால் அவர் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றும் அழைக்கப்படுகிறார். ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் படம் உலகளவில் சுமார் ரூ.650 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. ரஜினிகாந்த் ஒரு படத்திற்கு ரூ.110 முதல் ரூ.210 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இதன் மூலம் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ரஜினி 2-வது இடத்தில் இருக்கிறார்.

விஜய் 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கிறார். தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான லியோ படம் மாபெரும் வரவேற்பை பெற்று ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. தொடர் வெற்றிப்படங்கள் மூலம் வசூலை குவித்து வருவதால் பாக்ஸ் ஆஃபிஸ் கிங் என்று அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடிகர் விஜய் ஒரு படத்திற்கு ரூ.130 கோடி முதல் ரூ.200 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இதன்மூலம் நாட்டின் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் விஜய் 3-வது இடத்தில் இருக்கிறார்.

பிரபாஸ்

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் இந்தியாவின் அதிகம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். 2002-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான பிரபாஸ் மாறி மாறி வெற்றி தோல்வி படங்களை கொடுத்து வந்தார். எனினும் பாகுபலி 1, பாகுபலி 2 என மிகப்பெரிய வெற்றிப்படங்களில் நடித்ததன் மூலம் பான் இந்தியா நடிகராக மாறினார். பாகுபலி 1, பாகுபலி 2 இரண்டுமே பாக்ஸ் ஆபிஸ் வசூலில் புதிய சாதனை படைத்து இந்தியாவின் அதிக வசூல் செய்த படங்களில் இடம்பிடித்தன. இதை தொடர்ந்து ராதே ஷ்யாம் மற்றும் ஆதிபுருஷ் ஆகிய இரண்டும் பெரிய தோல்விப்படங்களாக மாறின.. எனினும் சமீபத்தில் வெளியான சலார் படம் உலகளவில் ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. பிரபாஸ் ஒரு படத்திற்கு ரூ.100 முதல் ரூ.200 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இதன் மூலம் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் 4-வது இடத்தில் இருக்கிறார்..

ஆமீர்கான்

பாலிவுட்டில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஆமீர் கான். தனது தனித்துவமான கதை தேர்வின் மூலம் தனக்கென தனி ரசிக பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் ஆமீர் கான். லகான், ஃபனா, ரங் தே பசந்தி, தாரே ஸமீன்பர், 3 இடியட்ஸ், பி.கே, தங்கல் என மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படங்களை ஆமீர்கான் கொடுத்துள்ளார். சமீபத்தில் ஆமீர் கான் நடிப்பில் வெளியான லால் சிங் சத்தா படம் தோல்வியை சந்தித்தாலும், அவர் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ஒரு படத்திற்கு ரூ.100 கோடி முதல் ரூ.175 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அவர் தனது சித்தாரே ஸமீன் பர் படத்தில் நடித்து வருகிறார்.

சல்மான் கான்

கணிசமான ரசிகர்களைக் கொண்ட மற்றொரு பாலிவுட் நடிகர், சல்மான் கானின். 1990கள், 2000களில் பல வெற்றி படங்களை கொடுத்த சல்மான் கான் பாய் என்று அழைக்கப்படுகிறார். திக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்களில் ஒருவராக அவர் இருக்கிறார். சல்மான் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான டைகர் 3, உலகம் முழுவதும் ரூ.466.63 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அவர் ஒரு படத்திற்கு ரூ.100 கோடி முதல் ரூ.150 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். 

கமல்ஹாசன்

உலகநாயகன் கமல்ஹாசன் பல்வேறு திறமைகள் கொண்ட ஆகச்சிறந்த நடிகர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நடிகர், இயக்குனர், நடனக் கலைஞர், பாடலாசிரியர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர். தமிழ் மட்டுமின்றி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி என பல மொழிகளிலும் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் அவர் மணி ரத்னத்துடன் கைகோர்த்துள்ள தக் லைஃப் படம் படம் மீதான எதிர்ப்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. நடிகர் கமல் ஒரு படத்திற்கு ரூ.100 முதல் 150 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். 

அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா என்ற மாபெரும் வெற்றி பெற்றது. இதன் மூலம் பான் இந்தியா நடிகராக அல்லு அர்ஜுன் பிரபலமானார். புஷ்பா 2 படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாக உள்ளது. புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து அல்லு அர்ஜுன் தனது சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தினார். அதன்படி அவர் ஒரு படத்திற்கு ரூ.100 கோடி முதல் ரூ.125 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

அக்‌ஷய் குமார்

பாலிவுட்டின் மற்றொரு பிரபல நடிகர் அக்‌ஷய் குமார். ஹேரா பேரி, பூல் புலையா மற்றும் பல குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சமீபத்திய ஆண்டுகளில், டாய்லெட்: ஏக் பிரேம் கதா, பேட்மேன் உள்ளிட்ட  முக்கியமான சமூக செய்திகளைக் கொண்ட பல திரைப்படங்களில் அவர் நடித்தார். சமீபத்தில் அக்‌ஷ்ய குமார் நடிப்பில் வெளியான OMG 2,  உலகம் முழுவதும் சுமார் ரூ.221 கோடி வசூல் செய்தது. அக்‌ஷய் குமார் ஒரு படத்திற்கு ரூ.65 முதல் ரூ.145 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

அஜித்குமார்

அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகர்களில் நடிகர் அஜித்தும் ஒருவர். ரசிகர்களால் தல என்று அழைக்கப்படும் அஜித் தனது திரை வாழ்க்கையில் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து அவர் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். நடிகர் அஜித் ஒரு படத்திற்கு ரூ.105 கோடி சம்பளம் வாங்குகிறார். 

click me!