பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த டாப் 10 தென்னிந்திய படங்கள்.. லிஸ்டுல இத்தனை தமிழ் படங்கள் இருக்கா?

First Published Jan 27, 2024, 4:06 PM IST

அதிகம் வசூல் செய்த டாப் 10 தென்னிந்திய படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..

ஒரு காலத்தில் இந்திய சினிமா என்றாலே பாலிவுட் படங்கள் தான் என்ற நிலை இருந்தது. ஆனால் பாலிவுட்டில் உச்ச நட்சத்திரங்களின் படங்களே தோல்வியை சந்தித்து வருகின்றன. மறுபுறம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தென்னிந்திய படங்களே அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. எனவே அதிகம் வசூல் செய்த டாப் 10 தென்னிந்திய படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அதிகம் வசூல் செய்த தென்னிந்திய படங்கள் பட்டியலில் கமல்ஹாசனின் விக்ரம் படம் 10-வது உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் ஃபாசில், விஜய் சேதுபதி, நரேன் நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.428.3 கோடியாகும். 

இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்திற்கு நல்ல வரவேற்பை பெற்றது. இது பாக்ஸ் ஆபீஸ் வசூலிலும் எதிரொலித்தது. விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.498.5 கோடியாகும். எனவே அதிகம் வசூல் செய்த தென்னிந்திய படங்களில் இப்படம் 9-வது இடத்தில் உள்ளது.

2015-ம் ஆண்டு வெளியான பாகுபலி முதல் பாகம் இந்த பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.572.1 கோடி ஆகும்.

கேஜிஎஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கிய சலார் படம் கடந்த ஆண்டின் இறுதியில் வெளியானது, பிரபா, பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது. ஆனால் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் உலகளவில் ரூ.595.6 கோடி வசூல் செய்துள்ளது. இதனால் சலார் அதிகம் வசூல் செய்த தென்னிந்திய படங்களில் 7-வது இடத்தில் உள்ளது. 

2023-ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் இந்த பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. நெல்சன் இயக்கிய இந்த படத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், மோகன் லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் உலகளவில் ரூ.6.7.3 கோடி வசூல் செய்தது. 

leo

2023-ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவான படம் லியோ. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எல்சியு படமாக உருவான இந்த படம் உலகளவில் ரூ. 615.5 கோடி வசூல் செய்து இந்த பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. 

2018-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 படம் நல்ல வரவேற்பை பெற்றது. ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் உலகளவில் ரூ.699.89 கோடி வசூல் செய்து இந்த பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. 

பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப் 2 பான் இந்தியா படமாக வெற்றி பெற்றது. யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் உலகளவில் ரூ.1177.9 கோடி வசூல் செய்து இந்த பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. 

RRR

ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான RRR படம் இந்த பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் உலகளவில் ரூ. 1250.9 கோடி வசூல் செய்தது. 

ராஜமௌலி இயக்கத்தில் 2017-ம் ஆண்டு வெளியான பாகுபாலி 2 படம் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பாகுபலி 1 படத்தின் தொடர்ச்சியாக உருவான் இந்த படம் உலகளவில் ரூ.1742.3 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. 

click me!