டி20 உலகக் கோப்பைக்கு முன் பும்ராவிற்கு ஓய்வு அளிக்க வேண்டும் – கீரன் பொல்லார்டு!

First Published May 8, 2024, 4:05 PM IST

ஜூன் மாதம் தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று மும்பை இந்தியஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் கீரன் பொல்லார்டு கூறியுள்ளார்.

Jasprit Bumrah, T20 World Cup Squad 2024

ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 26 ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. இதையடுத்து ஜூன் 1 ஆம் தேதி 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் 20 அணிகளின் வீரர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

Jasprit Bumrah

ஏற்கனவே இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில், வேகப்பந்து வீச்சாளராக ஜஸ்ப்ரித் பும்ராவும் இடம் பெற்றுள்ளார். இந்த நிலையில் தான் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் கீரன் பொல்லார்டு கூறியுள்ளார்.

T20 World Cup 2024

இது குறித்து, பொல்லார்டு கூறியிருப்பதாவது: டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக பும்ராவின் ஓய்வு குறித்து நான் எந்த விவாதத்திலும் பங்கேற்கவில்லை. அதைப் பற்றி விவாதமும் செய்யவில்லை.

Jasprit Bumrah, Mumbai Indians

இந்த நேரத்தில் இது எனது பங்கு மற்றும் செயல்பாடு என்று நான் நினைக்கவில்லை. அனைவரும் ஐபிஎல் முழுவதையும் விளையாட வந்திருக்கிறோம். சில நேரங்களில் உலகக் கோப்பைகளை பற்றி சிந்திக்கும் போது அணி தேர்வு நடந்த நிலையில் வீரர்களின் உடல் தகுதியும் பெரிதாக பார்க்கப்படும்.

Jasprit Bumrah

உலகக் கோப்பைகளை பற்றி சிந்திக்கும்போது வெவ்வேறு விஷயங்களைப் பற்றி அதிகளவில் ஆராயும் பொழுது, இந்த விஷயங்கள் அனைத்தும் அணியை தேர்ந்தெடுக்கும் முன்பே செயல்திறனை பாதிக்கலாம் என்று கூறியுள்ளார்.

TATA IPL 2024, Mumbai Indians

இந்த தொடரில் இதுவரையில் விளையாடிய 12 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 4ல் வெற்றியும், 8ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது. இந்த 12 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா 18 விக்கெட்டுகள் கைப்பற்றி பர்பிள் கேப் பெற்றுள்ளார். மேலும், அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் பும்ரா நம்பர் 1 இடத்தில் இருக்கிறார்.

India T20 World Cup 2024 Squad

எஞ்சிய 2 போட்டிகளில் விளையாடினாலும் மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு இல்லை. வரும் 11 மற்றும் 17 ஆம் தேதிகளில் முறையே கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் விளையாடுகிறது. தற்போது 8 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் எஞ்சிய 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட 12 புள்ளிகள் தான் பெறும்.

T20 World Cup 2024

எப்படியிருந்தாலும் பிளே ஆஃப் வாய்ப்பு ஒரு சதவிகிதம் கூட இல்லை. ஆதலால், டி20 உலகக் கோப்பைக்காக இந்திய அணி அமெரிக்கா புறப்படுவதற்கு முன் பும்ராவிற்கு ஒரு வாரம் அவகாசம் கிடைக்கும். ஏற்கனவே ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் மற்றும் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!